பாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்!
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவாகியுள்ளது. அந்தப் புகாரை ஒரு பெண் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் எனது இரு மகள்களுடனும், கணவருடனும் அயனாவரத்தில் வசித்து வருகிறேன். எனது மகள் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பாத்ரூம் ஜன்னல் ஓட்டை வழியாக யாரோ பார்ப்பது போல இருந்ததால் அவர் கத்தி சத்தம் போட்டார். இதையடுத்து ஓடிப் போய்ப் பார்த்தபோது வினோத் என்ற ஆட்டோ டிரைவர் தனது செல்போனை அந்த ஓட்டையிலிருந்து எடுப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நான் வேகமாக அவரிடம் விரைந்தேன். அவர் தப்ப முயன்றார். ஆனால் நான் அவரது செல்போனைப் பிடித்து பறிமுதல் செய்து விட்டேன். எனது கணவர் வந்ததும் நடந்ததைக் கூறினேன். அவர் விரைந்து சென்று வினோத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர் கொன்று விடுவேன் என்று மிரட்டலாக பேசினார்.
வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் தனது புகாரில் கூறியிருந்தார். செல்போனை வாங்கிப் பார்த்த போலீஸார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக குளியல் அறையில் குளிக்கும் காட்சிகளும் இருந்தன. இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீஸார் அவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications