சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் விரைவில் உயரும் ஆட்டோ கட்டணம்? புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா.. ஷாக் ஆகாதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் ஆட்டோ கட்டணங்கள் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஆட்டோ கட்டணங்களை வசூலிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அரசு நிர்ணயம் செய்ததைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

நீரில் விழுந்த சிறுவன்.. காப்பாற்ற குதித்த நண்பர்கள் - 3 சிறுவர்கள் உயிரை பறித்த பெரியகுளம் கண்மாய் நீரில் விழுந்த சிறுவன்.. காப்பாற்ற குதித்த நண்பர்கள் - 3 சிறுவர்கள் உயிரை பறித்த பெரியகுளம் கண்மாய்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆட்டோ

ஆட்டோ

இந்தச் சூழலில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் நீதிபதிகள், சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து, அவை வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசுக்கு அறிவுறுத்தினர்.

 கட்டணம்

கட்டணம்

கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யபப்டகிறது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில், இதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

 டிஜிட்டல் மீட்டர்

டிஜிட்டல் மீட்டர்

இது தொடர்பாக 12 ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் செயலிகள் மூலமே இப்போது பல ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரைட்கள் கிடைக்கின்றன. இருப்பினும், அவை அதிகளவில் கஷிஷன் வசூலிப்பதால் 'டிஜிட்டல் மீட்டர்' என்ற செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 புதிய கட்டணம்

புதிய கட்டணம்

அதன்படி இந்த கோரிக்கைகள் குறித்துப் பரிந்துரை அளிக்க இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான குழு ஆட்டோ தொழிற்சங்க ஓட்டுநர்களில் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்தனர். முதல் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 மற்றும் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.1 வசூலிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 பரிந்துரை

பரிந்துரை

இந்தச் சூழலில் ஆட்டோக்களில் முதல் 1.5 கிலோ மீட்டருக்கு 40 ரூபாயும் கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்த பரிந்து அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பா அரசு அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தமிழக மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்டோ கட்டண விலையேற்றும் சிக்கலையே தரும்.

English summary
Auto fares will raise soon in tamilnadu: (தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை காரணமாக உயரும் ஆட்டோ கட்டணம்) Tamilnadu Auto fare may get revised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X