Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ச் அப்பவே எச்சரிச்சாங்களே.. எமனாகிறதா பைக் டாக்ஸி? தொடரும் ஷாக் சம்பவங்கள்.. ரொம்ப கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்தநாள் அன்று ரேபிடோ பைக்கில் சென்ற இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரேபிடோ பைக் டாக்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ஏற்கனவே போக்குவரத்து துறை ஆணையர் கூறியிருந்தது உத்தரவாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

உலக அளவில் அதிகம் போக்குவரத்து ட்ராபிக் உள்ள நகரங்களில் சென்னை 36வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. தேசிய அளவில் சென்னை முதல் 10 நகரங்களுக்குள் இருக்கிறது. இந்த ட்ராபிக் பிரச்னையை சமாளிக்க அவ்வப்போது பல முயற்சிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ட்ராபிக் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. எனவே மக்கள் பொதுப்போக்குவரத்திற்கு காத்திருந்து காத்திருந்து அலுப்படைந்து தற்போது தனியார் போக்குவரத்தை நாடியுள்ளனர்.

Auto rickshaw unions urge ban on bike taxis after woman dies in bike taxi in Chennai

சென்னையில் என்னதான் டாக்ஸி கார்கள் இருந்தாலும் ஒரு இடத்திற்கு விரைவாக போக வேண்டும் எனில் அப்போது சட்டென கைக்கொடுப்பது ஆட்டோக்கள்தான். ஏர்போர்ட் தொடங்கி கல்யாண வீடு வரை அர்ஜென்ட் எனில் அதுக்கு ஆட்டோதான். ஏனெனில் இந்த சென்னையில் ஆட்டோகாரர்களுக்கு தெரியாத வழிமுறைகளே கிடையாது. எங்கு போக வேண்டும் என்றாலும் சரியான நேரத்திற்கு கொண்டு சேர்த்துவிடுவார்கள். இப்படி இருக்கையில் காலங்கள் செல்ல செல்ல ஆட்டோக்கள் சென்னையை ஆதிக்கம் செலுத்த தொடங்கின.

ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைக்கட்டுப்படுத்த மீட்டர் முறை கொண்டுவரப்பட்டது. மீட்டர் முறையும் சரியான தீர்வாக அமையாததால் விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களும் அறிமுக்கப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் அதிக கட்டணத்தை வசூலிக்க தொடங்கினர். இதற்கிடையில் பெட்ரோல் டீசல் விலையுயர்வு இந்த கட்டண உயர்வை மேலும் அதிகரித்தது.

அப்போதுதான் ஓலா உள்ளிட்ட ஆப்கள் அறிமுகமாகின. இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது என்பதை போல சக ஆட்டோ ஓட்டுநர்களை ஓலாவில் இணைத்துக்கொண்டு அடிக்கடி சவாரி கொடுக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான ஆட்டோக்களால் சவாரியே இல்லாமல் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓலா ஒரு வாய்ப்பாக தெரிந்தது. ஆனால் இதுதான் ஆட்டோகாரர்களின் வம்சத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.

இதன் பின்னர் வந்ததுதான் ரேபிடோ பைக் டாக்சி. ஆட்டோவை விட வேகமாகவும், விரைவாகும் நினைத்த இடத்திற்கு இது மனிதர்களை கொண்டு சேர்ப்பதாலும் குறைவான கட்டணத்தாலும் ரேபிடோவுக்கு ஏகப்பட்ட கிராக்கி உருவானது. இது ஆட்டோ தொழில்களை கடுமையாக பாதித்தது. ஆனால் ரேபிடோ பைக் டாக்ஸியிலும் சில பிரச்னைகள் உருவானது. பொதுவாக இருச்சக்கர வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பு சென்னையில் கேள்வி குறியாக எழுந்துள்ள நிலையில், இருச்சக்கர வாகனத்தை டாக்ஸியாக பயன்படுத்துவது எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மட்டுமல்லாது மற்ற வாகனங்களை காட்டிலும் பைக்குகள்தான் அதிக அளவில் போக்குவரத்து விதிகளை மீறுகின்றன. எனவே பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இது தவிர வாடகை வாகனங்கள் ஓட்டும் அனைவரும் மஞ்சள் பிளேட் கொண்ட வாடகை வாகனத்தைதான் ஓட்டி வருகின்றனர். யாரும் வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தை வாடகைக்கு இயக்குவதில்லை. அப்படி இயக்குவது சட்டவிரோதம். ஆனால் பைக் டாக்ஸிகள் அனைத்தும் வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட சொந்த வாகனங்களாகும். எனவே இதனை எப்படி சட்டப்பூர்வமாக அனுமதிக்க முடியும்? என்று ஆட்டோ தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Auto rickshaw unions urge ban on bike taxis after woman dies in bike taxi in Chennai

இந்நிலையில் இன்று சென்னையில் நிகழ்ந்துள்ள சம்பவம் பைக் டாக்ஸிகளுக்கு எதிராக மீண்டும் வலுவான குரல்களை எழுப்பியுள்ளது. அதாவது சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் தேவிகா (39). இவருக்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் இன்று வியாசர்பாடியில் இருக்கும் தனது தாயிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்திருக்கிறார். இதனையடுத்து பைக்கில் ஓட்டுநருடன் தேவிகா சென்றுக்கொண்டிருக்கையில் லாரி மோதி இவர்கள் சென்னை பைக் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் தேவிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவிகாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தேவிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கனவே இதுகுறித்து போராட்டம் நடத்தியிருந்த ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மாநகர போக்குவரத்து துறை ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் ஆணையர் பைக் டாக்ஸியை தடை செய்வது குறித்து வாக்குறுதி அளித்ததாக ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர். எனவே இந்த வாக்குறுதி உத்தரவாக பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+