நிலத்தை வாங்குவோருக்கு தானியங்கி பட்டா முறையில் சிக்கல்? பட்டா பெயர் மாற்றம்! வருவாய்த்துறை அதிரடி
சென்னை: பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் அடிப்படையில் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெறுகிறது. வருவாய்த்துறையில் சில அதிகாரிகள் தலையீடு இருக்கவே கூடாது என்பதற்காகவே, பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு இந்த தானியங்கி முறை பட்டா மாறுதலை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.. இந்த நடைமுறையானது மக்களுக்கும் உதவியாக இருந்து வருகிறது. எனினும் திடீரென சில சிக்கல்கள், புகார்கள் இதில் கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது.. என்ன நடந்தது?
நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அதற்குரிய பட்டாவை வாங்குவது பெரும்பாடாகிவிடும்.. நடையாய் நடந்து இதற்கான காலவிரயமும் அதிகமாகிவிடும். பலபேருக்கு, பட்டா வாங்க முடியாமல் சம்பந்தப்பட்ட நிலம் கைநழுவி சென்ற நிகழ்வுகளும் உண்டு.. இப்படியான நடைமுறை சிக்கல்களுக்கெல்லாம் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

அதன்படி, பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... இதற்காக பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
பட்டா பெயர் மாற்றம்
இதன்ஒருபகுதியாக, தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.. வருவாய் துறை அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த 2020 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்திட இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நில கிரையங்கள் - பதிவுத்துறை
உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். இதனால் கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவைய பெற வேண்டுமானால், தங்களது செல்போன் நம்பர், ஆதார் நம்பரை வழங்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறையின்படி, ஒருவர் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் இது குறித்த தகவல்கள் அனைத்துமே பதிவுத்துறையே வருவாய்த்துறைக்கு தெரிவித்து விடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி சம்பந்தப்பட்டவருக்கு பட்டா வழங்கப்பட்டுவிடும்.
தானியங்கி முறையில் பட்டா
பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வருவாய் துறையின், தமிழ் நிலம் (tamilnilam) தகவல் தொகுப்புக்கு விவரங்கள் அனுப்பப்படும். அங்கு, தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றப்படும். சுருக்கமாக சொன்னால், உட்பிரிவு தேவை இல்லாத சொத்துக்களை வாங்கும்போது, அதற்கான பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
எனினும்கூட, பட்டா பெயர் மாற்றங்கள் செய்ய நேரிட்டால், சில வருவாய்த்துறை உள்ளூர் அதிகாரிகள் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.. மேலும் சில இடங்களில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் பணிகளை, வருவாய் துறை உள்ளூர் அதிகாரிகள் தடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
விஏஓக்கள் முட்டுக்கட்டை?
பட்டா மாறுதல் பெறுவதற்காக அரசு கொண்டுவந்துள்ள தானியங்கி திட்டம் அருமையான திட்டம் என்றாலும், இதற்கு முட்டுக்கட்டையாக சில விஏஓக்களே செயல்படுகிறார்களாம்.
தானியங்கி முறை திட்டத்தில் கிடைக்கப்பெறும் விண்ணப்ப விபரங்களை பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களை வேண்டுமென்றே வரசொல்லி அழைக்கழிக்கிறார்களாம்.. விண்ணப்பங்கள் குறித்து தேவையில்லாத சந்தேகங்களையும் கிளப்புகிறார்களாம்.. இப்படியான புகார்கள் பதிவுத்துறையிலிருந்தும் முளைத்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக புகார்களை தந்தாலும், எந்த பலனும் இல்லையாம்.. எனவே, தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை, வருவாய் துறை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் மேற்கண்ட புகார்கள் உண்மைதானா? என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறார்களாம்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications