சென்னையில் கோவை தொழிலதிபர் ஆரம்பித்த கம்பெனி.. மனைவியுடன் சேர்ந்து நம்பிக்கை துரோகம் செய்த நண்பன்
சென்னை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது மனைவியும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து அந்த நிறுவனத்தை அபகரித்துள்ளார். இந்த புகாரில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாநகரம் விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரில் வசித்து வருபவர் தனிஷ் சேவியர் ஆனந்தன். இவருக்கு 54 வயதாகிறது. ஆனந்தனுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். அவர் கோவையில் வசிக்கும் நிலையில், தனது நண்பரான சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் தனது பெயரில் கம்பெனியை ஆரம்பித்து பார்த்துக் கொள்ளுமாறுக்கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏதுமின்றி ஒப்படைத்திருக்கிறார்.

இந்நிலையில் முத்துராஜ் தனது மனைவி முத்துலட்சுமி பெயரில் அந்த கம்பெனியை மாற்றியிருக்கிறார். பின்னர் அவரது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கோயம்பேடு வங்கி கிளையில் கடனும், திருவள்ளூரில் அரசு மானியமும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து முத்துராஜ் அவரது மனைவி மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தனது கம்பெனியை அவர்களுக்கு எழுதி கொடுத்தது போல் போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்டது தனிஷ் சேவியர் ஆனந்தனுக்கு விசாரித்த போது தெரியவந்தது.
தன்னை ஏமாற்றிய நண்பன் மற்றும் மனைவி மற்றும் அவருக்கு உதவியவர் உள்பட 3 பேர் மீதும் ஆனந்தன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து சென்னை கீழ்ப்பாக்கம் பேங்க் தெருவை சேர்ந்த முத்துராஜ் (46), அவரது மனைவி முத்துலட்சுமி (40) மற்றும் கார்த்திக் (39) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications