வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் ஆகும் டான்யா.. ஆபரேஷனுக்கு பிறகு திரும்பிய "வசந்தம்".. நீ என்றுமே அழகுதான்!
ஆவடி: அரிய வகை முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த 9 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்நதவர் ஸடீபன்ராஜ்- சவுபாக்யா தம்பதி. இவர்களது 9 வயது மகள் டான்யா. இவருக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக இவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை.
இதனால் சிறுமியை பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் புறந்தள்ளினர். இதனால் மனம் வெம்பிய டான்யா, தனது முகத்தை சீரமைத்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வேன் என கூறிவிட்டார்.

அறுவை சிகிச்சை
இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு டான்யா வீடியோ மூலம் கோரிக்கை விடுததார். இதையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டுக்கு சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினர்.

இலவச அறுவை சிகிச்சை
இந்த நிலையில் சிறுமிக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதாக கூறியதை அடுத்து சிறுமி ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 22 ஆம் தேதி வரை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

டான்யா
கடந்த 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு டானியாவுக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை மாலை 5 மணிக்கு முடிந்தது. அதாவது 9 மணி நேரம் உயர் தொழில்நுட்ப வசதி மூலம் 31 மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த டான்யா பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

திரவ உணவு
சிறுமிக்கு திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் முகம் பழைய நிலைக்கு எப்போது வரும், முகத்தில் உள்ள புள்ளிகள் எப்போது மறையும், அடுத்த முறை நான் டானியாவை பார்க்க வரும் போது அவரது முகத்தில் புள்ளிகள் நீங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

டான்யாவிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு
சிறுமி டான்யாவின் முகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த டான்யாவை அமைச்சர் சா.மு. நாசர் நேற்றைய தினம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இயல்பு நிலைக்குத் திரும்பும் டான்யா
அப்போது நாசரிடம் டான்யாவின் முகம் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் வெள்ளிக்கிழமை அவர் வீட்டிற்கு செல்வதாகவும் மருத்துவர்கள் கூறினர். முதல்வர் ஸ்டாலினும் டான்யாவின் உடல்நலம் குறித்து தன்னிடம் கேட்டு வருவதக அமைச்சர் நாசர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications