அவரும் நானும்.. பிரிவு தந்த துயரம்..உடைந்து பெருகிய கண்ணீர்..விவரிக்கும் துர்கா ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு போகும் போது பெற்றவர்களை பிரியமுடியாமல் அழுவது வழக்கமான ஒன்று. அதே நேரத்தில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்லும் போது அம்மா வீட்டிற்கு போகிறோம் என்ற மகிழ்ச்சி இருக்கும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிற்கு திருமணமாகி ஒரு மாதத்தில் கணவரை பிரிந்து அப்பா உடன் வீட்டிற்கு போகும் போது கண்ணீர் ஆறாக பெருகியதாம். தான் எழுதிய நூலில் அதனை குறிப்பிட்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.

முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா, தனது வீட்டில் எந்தெந்த பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரைக்கும் பொறுப்பாக பார்த்துக்கொள்வார். அவருடைய ஹோம் டூரில் பூஜை அறை, சமையல் அறை பற்றி யூடுயூப் சேனலில் வெளியாகி இருந்தது.

துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் என்ற நூலின் ஒலி வடிவமும் வெளியாகி உள்ளது. 2011 முதல் 2015 வரை 'தளபதியும் நானும்' என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த நூல் இப்போது ஒலி வடிவத்தில் வெளியாகியுள்ளது.
அதில் தனது திருமண வாழ்க்கையில் நிகழ்ந்தவைகளை சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ளார். இது நாயகி யூடுயூப் சேனலில் பல பகுதிகளாக வெளியாகியுள்ளது.

ஹனிமூன்

ஹனிமூன்

திருமணமான பின்னர் உதகைக்கும், முதுமலைக்கும் ஹனிமூன் சென்றோம். 10 நாட்கள் அங்கு இருந்ததை என்னுடைய வாழ்க்கையின் பொக்கிஷமான நாட்களாக நினைக்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவருடன் தனிமையில் இருக்கும் நாட்கள் மறக்கமுடியாதாக இருக்கும். வாழ்க்கையில் புதிதாக கிடைக்க நெருக்கம் பெண்களால் மறக்க முடியாது. எனக்கும் மறக்க முடியாது. தனி வீடு எடுத்து சிறப்பாக சமைத்து கொடுத்தார்கள். சரியான நேரத்திற்கு உணவு, சூப் கொடுத்து ஒரு காவல்துறை அதிகாரி நன்றாக கவனித்தார்.

மலரே குறிஞ்சி மலரே

மலரே குறிஞ்சி மலரே

ஹனிமூன் ட்ரிப்பில் உதகையில் ஒரு தியேட்டரில் டாக்டர் சிவா என்ற படம் பார்த்தோம். மலரே..குறிஞ்சி மலரே.. என்று சிவாஜி பாடும் அந்த பாடலை இப்போதும் எஃப் எம் ரேடியோவில் கேட்டாலே எனக்கு உதகை ஹனிமூன் ட்ரிப் நினைவிற்கு வந்து விடும். பழனியில் ஒருநாள் தங்கியிருந்த போதும் வாழ்ந்து காட்டுகிறேன் என்ற படம் பார்த்தோம்.

பிரிவு துயரம்

பிரிவு துயரம்

திண்டுக்கல்லில் நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு எனது கணவர் சென்றார். நான் அப்பா உடன் எனது பிறந்த வீட்டிற்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கிற்கு சென்றேன். அப்போது முதல் முதலாக அவரை பிரியப்போகிறோமே என்று கண்ணீர் வந்தது. அப்பா உடன் மாயவரத்திற்கு ரயிலில் ஏறிய போது அவர் என்னிடம் நான் திண்டுக்கல் கிளம்பறேன். நீ அப்பா உடன் கிளம்பு என்ற சொன்ன உடன், நான் ரயிலில் ஏறி கை ஆட்டினேன். அவரும் காரில் ஏறி ரயில் போகும் பாதையை ஒட்டி இருந்த சாலையில் கூடவே வந்தார். நான் அழுது கொண்டே கை ஆட்டிக்கொண்டே வந்தேன் என்று கூறியுள்ளார் துர்கா.

10 நாட்கள்

10 நாட்கள்

கரை உடைந்த நதி போல என் கண்களில் கண்ணீர் பெருகியது. சினிமா காட்சிகள் எனக்கு நினைவுக்கு வந்தது. அப்போது என்னைப்பார்த்த அப்பா, மாப்பிள்ளைக்கு உன்னை பிரிந்து ஊருக்கு அனுப்ப இஷ்டமில்லையா? நீ ஊருக்கு போகிறாயா என்று கேட்டார். என்ன ஒரு வேடிக்கை..ஒரு மாதத்திற்கு முன்னாடிதான் திருமணமாகி அப்பாவை விட்டு பிரிய மனமில்லாமல் தேம்பி தேம்பி அழுது கொண்டு வந்தேன். இப்போது கணவரை பிரிந்து செல்ல மனமில்லாமல் அழுகிறேன். பெண்களின் வாழ்க்கையில் ஒரு மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் துர்கா ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+