சென்னையை சூழ்ந்து வரும் ஆபத்து.. கடற்கரைகளில் நடந்த மிகப்பெரிய மாற்றம்.. விஞ்ஞானிகள் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் 423 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. அதீத கனமழையும், வறட்சியும் அடிக்கடி ஏற்படுகிறது. கடற்கரைகள் அரிப்புகள் ஏற்படுகிறது. கடுமையான கடல் அலை சீற்றங்களால் கடற்கரை பகுதிகள் பாதிக்கப்படுகிறது. இதில் கடற்கரையில் பாதிப்புகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கடல் அரிப்பு அதிகரிக்கும் போது, அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை பாதிக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை இந்தியாவில் 6 ஆயிரத்து 907 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரைகள் இருக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 1,945.6 கிலோ மீட்டருக்கு கடற்கரைகள், ஆந்திராவில் 1,027.58 கிலோ மீட்டரும், தமிழகத்தில் 991.47 கிலோ மீட்டர் தூர கடற்கரைகளும் இருக்கின்றன.
கடல் அரிப்புகளால் கடற்கரைகளில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் புயல் கரையை கடந்த பின்பு, கடற்கரை பகுதிகள் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர செயற்கையாகவும் கடல் அரிப்பு ஏற்படுகிறது. கடற்கரைகள் பகுதிகளில் நடைபெறும் துறைமுக கட்டுமான பணிகள் மற்றும் இதர கட்டிட பணிகள் கடற்கரை அரிப்பை அதிகமாக்குகிறது.
எனவே மத்திய அரசு, நாட்டில் உள்ள கடற்கரை பகுதிகளை தொடர்ந்து கண்காணித்திருக்கிறது. அதில் குஜராத் கடற்கரையில் அதிகளவு மண் அரிப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 537.5 கிலோ மீட்டர் கடற்கரை பகுதிகள் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகத்தில் மட்டும் 422.94 கிலோ மீட்டர் கடற்கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மொத்த கடற்கரையில் 43 சதவீதம் ஆகும். மேலும் தமிழகத்தின் 332.69 கிலோ மீட்டர் தூர கடற்கரைகள் நிலையான தன்மையுடன் உள்ளது. 235.85 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகள் மண் அரிப்புக்கு எதிரான மண் குவிப்பு இருக்கிறது.
மண் அரிப்பு காரணமாக, கடலின் நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வின்படி, தமிழ்நாட்டில் திருவாரூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கடல் பகுதிகளில் சராசரியாக கடல் நீர்மட்டம் 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 20 செ.மீட்டர் அளவுக்கு உயரலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேவேளையில் இந்தியாவில் கடல் நீர்மட்டம் உயர்வால் சென்னையும், கொல்கத்தாவும் 2,100-ம் ஆண்டின் போது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் பாதிப்பு என்பது தற்போதைய அளவீடுகளை வைத்து நீர்மட்டம் உயரும் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், அதில் பருவ நிலை மாற்றத்தால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications