மின் தடை என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது! மின்வாரிய அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய தங்கம் தென்னரசு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிக நேரம் மின் தடை ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்திய சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் இதனைக் கூறியிருக்கிறார். ஷட் அவுன் என்ற பெயரில் 8 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதாக கடந்த வாரம் ஒன் இந்திய தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல் பிரபல யூடியூபரான இர்பானும் மின் தடை குறித்து மின் வாரியத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தான் மின் தடைக்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆர்டர் போட்டுள்ளார். மேலும், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு அலுவலரிடமும் அமைச்சர் கேட்டறிந்தார். அதேபோல் பொதுமக்களிடமிருந்து மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அனைத்து அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களிடமும் நேரடியாக அவர்களுடைய பிரிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும், வரப்பெற்ற புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராவண்ணம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டு, எதிர் வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர் கொள்வதற்கும், மழைக்காலங்களின் போது சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க இடைச்செருகலாக புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டிகளில் பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதனை திட்டமிடலுடன், பொதுமக்களுக்கு உரிய முறையில் முன் அறிவிப்புகள் செய்து, அதிக நேரம் மின்தடை ஏற்படாமலும் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது எனவும், மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீர் இணைப்புகள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் வளாகங்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கண்ட ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" ஒன்றினை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் நடத்திட மாண்புமிகு அமைச்சர் உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications