மகாவிஷ்ணுவை விடுங்க.. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சமத்துவம் வளர்க்கும் TN Fact Check பிரிவு!
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆன்மீக போதனை என்ற பெயரில் சமத்துவதற்கு எதிராக பரம்பொருள் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த காலகட்டத்தில், வெறுப்பு பேச்சுகளை எதிர்த்தும், தகவல் சரிபார்ப்பை உணர்த்தவும், சமத்துவத்தை வளர்த்தெடுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம். தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் சார்பில் நடத்தும் பள்ளி, கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சி 12000+ மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலிச் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, மக்களுக்குத் தரவுகளோடு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் சரிபார்ப்பகம் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் இயங்கி வருகிறது. இதன் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார்.

தகவல் சரிபார்ப்பகம் மூலம் தமிழக அரசு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள், விபத்துகள் குறித்த போலி வீடியோக்கள், சாலை - கட்டுமானங்கள் - அரசு நிறுவனங்கள் பற்றிய போலிச் செய்திகள், அரசியல் தலைவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திரித்துப் பரப்பப்படும் வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட பலவற்றுக்கு ஆதாரங்களோடு விளக்கம் அளித்து மக்களுக்கு உண்மையையைக் கொண்டு சேர்க்கும் விதமாக இயங்கி வருகிறது.
தகவல் சரிபார்ப்பகத்தின் மூலம் உண்மை சரிபார்ப்பு செய்யப்படும் தகவல்கள் தொடர்பான விவரங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேபோல, மக்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியிலும், தகவல் சரிபார்ப்பகத்தின் சேனல் ஒன்று இயங்கி வருகிறது. அதன் வாயிலாக உண்மைத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுகள் மூலமாகவும், விழிப்புணர்வு உரைகள் வாயிலாகவும், மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் அன்றாடம் நடந்து வரும் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி, வெறுப்பு பிரச்சாரம், பெண்களுக்கு எதிரான பார்வை, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குயுக்தி சிந்தனை, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறுகள் ஆகியவற்றைக் களையும் நோக்கத்தோடு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்.

தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் நடத்தி வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது 12,000-த்திற்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது தகவல் சரிபார்ப்பகம்.
ஒருபக்கம், ஆன்மீக போதனை என்ற பெயரில் மகாவிஷ்ணு போன்றவர்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி தங்கள் கரங்களை நீட்டியுள்ள நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவதூறுகளைக் களைந்து உண்மையை அறிவது பற்றியும் மதச்சார்பின்மை, சமத்துவக் கருத்துகளை விதைக்கவும் செயலில் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்க முயற்சி.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications