உதயநிதி போட்ட போடு.. "ஹாட்ரிக்" அடித்த முதல்வர் ஸ்டாலின்.. காரணம் யார் தெரியுமா, அதிர்ந்த மேடவாக்கம்

முதல்வர் ஸ்டாலினின் சாதனை குறித்து உதயநிதி பேசிவருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாகவே உதயநிதி ஸ்டாலின், பூரித்து காணப்படுகிறார்.. திமுகவின் வெற்றியை எங்கு சென்றாலும் மறக்காமல் பதிவு செய்துவிட்டும் வருகிறார்..!

முதல்வர் முக ஸ்டாலின் 69-வது பிறந்தநாள் விழா சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ச.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடிகர்கள் ராஜேஷ், தியாகராஜன், பாண்டியராஜன், ரமேஷ் கண்ணன், தம்பிராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை குறித்து உரையாற்றினர்.

 திமுக தலைவர்

திமுக தலைவர்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர்.. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தந்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவே திமுக தலைவரை பாராட்டி கொண்டு இருக்கிறது... அவர் முதல்வராக பொறுப்பேற்றபோது, இந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? ஆபத்தான கொரோனா இருந்த சூழ்நிலை இருந்தது..

பூஸ்டர்

பூஸ்டர்

25 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு அவங்களுக்கு பெட் கூட கிடைக்காத நிலைமை இருந்தது.. நம்ம முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்தார்.. அதற்கு துணையாக இருந்தவர்தான் மா.சுப்பிரமணியன்... கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி தான்... தடுப்பூசி கிடைக்காமல் அப்போது தட்டுபாடாக இருந்தது... காரணம், அதிமுக ஆட்சியில் தடுப்பூசி என்றால் பயத்துடன் இருந்தனர். ஆனால் அந்த பயத்தை போக்கி 10 மாதங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 10 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரத்து 580 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..

 ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி


முதல் டோஸ் 5 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்து 792 பேருக்கும் 2வது டோஸ் 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 496 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 7 லட்சத்து 3 ஆயிரத்து 290 பேருக்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.. அதேபோல, இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது... 1453 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புற்று நோய் சிகிச்சைக்காக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரசு இங்குள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது.

 ஹாட்ரிக்

ஹாட்ரிக்

நம் முதல்வர் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்... தமிழக மக்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர். முதலில் பாராளுமன்றம் தேர்தல், அடுத்த சட்டமன்ற தேர்தலில், இப்போ உள்ளாட்சித் தேர்தல் என மாபெரும் சரித்திர வெற்றி. அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.. அதைவிட, அவரது இந்த வெற்றிக்கே தமிழக மக்கள்தான் காரணம்! என்றார். நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுகவின் வெற்றியையும், முதல்வரின் சாதனையையும் பாராட்டுவதையே சமீப காலமாக வைத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+