அடேங்கப்பா Axis My India கணிப்பு! 120 தொகுதிகளுக்கு கூட பிரச்சாரம் செய்யாத விஜய்! எப்படி சாத்தியம்?
சென்னை: ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் விஜய்க்கு 98 முதல் 120 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட நிலையில் 120 தொகுதிகளில் கூட பிரச்சாரம் செய்யாத விஜய்க்கு 120 இடங்கள் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் இடங்கள்: 98 முதல் 120 தொகுதிகள் வரை.
நிலைமை: ஒருவேளை 118 இடங்களை எட்டினால், விஜய் தனது முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகப் பதவியேற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திமுக கூட்டணிக்கு கடும் சரிவு?
ஆளும் கட்சியான திமுக, இந்த முறை ஆட்சியைத் தக்கவைக்கக் கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்தக் கணிப்பு கூறுகிறது.
எதிர்பார்க்கப்படும் இடங்கள்: 92 முதல் 110 தொகுதிகள் வரை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவதில் பெரும் சவாலைச் சந்திக்கும் எனத் தெரிகிறது.
அதிமுக கூட்டணி நிலை என்ன?
மற்ற எக்சிட் போல்கள் அதிமுகவிற்கு முன்னிலை கொடுத்த நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் அதிமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த திமுக - அதிமுக ஆகிய இருமுனை அரசியலை உடைத்து, விஜய் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளார் என்பதை இந்தக் கணிப்பு உறுதிப்படுத்துகிறது. இளைய தலைமுறை மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவில் தவெக-விற்குச் சென்றுள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கு பல்வேறு அரசியல் நிபுணர்கள் தங்களது எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் கோடீஸ்வரன், "விஜய் 120 தொகுதிகளில் கூட பிரச்சாரம் செய்யாத நிலையில் அவர் 120 தொகுதிகளில் வெல்வார் என எப்படி சொல்ல முடியும். ஆக்சிஸ் மை இந்தியாவின் இந்த கணிப்பு தவெகவினருக்கு மகிழ்ச்சியை தரும். மற்றபடி களநிலவரமே வேறு" என தெரிவித்துள்ளார்.
அது போல் சில மூத்த பத்திரிகையாளர்கள், "தமிழகத்தில் முதல் முறையாக போட்டியிடும் ஒரு கட்சி இத்தனை சீட்களில் வெல்லும் என எப்படி சொல்ல முடியும். 98 முதல் 120 சீட்களில் பாதிக்கு பாதி வெல்லும் (அதாவது 49 முதல் 60) என சொன்னாலே அது கற்பனைக்கும் எட்டாத விஷயமாகும்.
அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் கடுமையாக களப்பணியாற்றியிருந்தனர். ஆனால் விஜய் ஒரு நாள் பிரச்சாரம் , அடுத்த நாள் ஓய்வு என இருந்தார். பொதுமக்களுடன் ஜெல்லாகவில்லை. எப்போது ஒரு கம்ஃபர்ட் ஜோனிலேயே இருந்தார்.
அப்படியிருக்கும் போது 120 தொகுதிகளில் விஜய் வெல்வார் என கூறுவது விஜய்க்கே அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எது எப்படியிருப்பினும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications