Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயனாவரத்தில் அதிர்ச்சி! பட்டப்பகலில் பிரியாணி கடைக்குள் புகுந்து உரிமையாளர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அயனாவரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை கலெக்டர் காலனியை சேர்ந்தவர் நாகூர் கனி(33). இவருக்கு திருமணமாகி கதீஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அயனாவரம் சந்தை அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.

இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நாகூர் கனி வழக்கம் போல் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

5 பேர்

5 பேர்

அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட மர்மநபர்கள் நாகூர் கனியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் முகத்தில் வெட்டுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நாகூர் கனி சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அயனாவரம் போலீசார் விரைந்து நாகூர்கனி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை நடந்ததா? எனவும், கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை

கொலை

இந்த கொலை எப்படி நடந்தது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சென்னையில் பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்ற அவர்களுடைய பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிசிடிவி கேமராக்கள்

சிசிடிவி கேமராக்கள்

நாகூர் கனியை கொலை செய்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால் சிசிடிவி காட்சிகளில் அவர்களது முகம் பதியவில்லை. இதனால் போலீஸார் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். அயனாவரம் பகுதியே இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளது. நாகூர் கனியை கொலை செய்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால் சிசிடிவி காட்சிகளில் அவர்களது முகம் பதியவில்லை. இதனால் போலீஸார் வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். அயனாவரம் பகுதியே இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+