ராமர் சிறப்பு பூஜைகளை தடுக்க கூடாது.. உச்ச நீதிமன்றம்! நாங்கள் எதையும் தடுக்கவில்லை.. தமிழ்நாடு அரசு
சென்னை: ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. '
பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .

நோட்டீஸ்: இதில் முறையாக விளக்கம் அளிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு கோவிலில் சிறப்பு பூஜை நடத்த தடை விதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிறப்பு பூஜை, ராமர் கோவில் விழாவை ஒளிபரப்ப தடை செய்துள்ளது . அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய பாஜக கட்சி சார்பாகவும், பாஜகவின் வினோஜ் பி செல்வம் சார்பாகவும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. தமிழ்நாடு அரசு பூஜைகளை தடை செய்துவிட்டதாக கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
உண்மை என்ன?: அயோத்தி ராமர் கோவில் விழா இன்று அயோத்தியில் விமர்சையாக நடக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் ராமர் கோவில்களில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவின.
நிர்மலா சீதாராமன்; கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.
தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்
அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் நிர்மலா புகார்: இந்த நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் புகார்களை வைத்துள்ளார். அதில், தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது . திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது; எல்இடி திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது; இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது. மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பாற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள், என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications