சென்னையே துள்ளுது.. 4 நாள் விடுமுறையில் திணறும் தமிழகம்.. அலர்ட் ஆன போலீஸ்..தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆயுதபூஜை இந்த வருடம் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமையாக வருகிறது.. அதேபோல, விஜயதசமி மறுநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்தமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன..

4 நாள் விடுமுறை: அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதில், ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். எனவே, நெரிசலை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் சிறப்பு பேருந்துகளால் பொதுமக்கள் நிம்மதியடைந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள்: இதனிடையே, கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில், தமிழக போலீசார் விழிப்பாகி உள்ளனர்.. அந்தவகையில், விடுமுறை நாட்களில், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் இதற்கான அதிரடியை கையில் எடுத்துள்ளனர்.. அதேபோல, போக்குவரத்து போலீஸார் வாகனங்களையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்: முன்னதாக, ஆயுத பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவைகள் குறித்த அறிவுறுத்தல்களையும் காவல்துறைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அவங்க எங்க அம்மா.. நடுராத்திரி வேளச்சேரியில் டீ குடிக்க வந்த 2 பேர்! சென்னையில் மூதாட்டிக்கு கொடூரம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம்












Click it and Unblock the Notifications