4 நாள் லீவு விட்டுட்டா போதும்.. சின்ராச கையில பிடிக்க முடியாது! தாறுமாறாக எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜைக்காக 4 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதாக ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது பயணிகள் புகார் கூறியுள்ளனர். சென்னை - குமரி கட்டணம் ரூ.1,800-ல் இருந்து ரூ.3,420 ஆகவும், சென்னை - நெல்லை கட்டணம் ரூ.1,399-ல் இருந்து ரூ.3,000 ஆகவும், சென்னை - மதுரைக்கு ரூ.2,500, கோவைக்கு ரூ.3,500 ஆகவும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்துக்கள் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. வழக்கமாக பிற பண்டிகைகள் கடவுளை முன்னிறுத்தி கொண்டாடப்படும். ஆனால், ஆயுத பூஜை செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து மேற்கொள்ளப்படும் பூஜையாகும்.

Ayudha Pooja Holiday Omni Bus

இருசக்கர வாகனங்கள், தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், தொழிற்சாலைகள் என தங்கள் பணியிடங்களில் அனைவரும் ஆயுத பூஜை மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜையும், 20ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட இருக்கிறது.

ஆயுத பூஜை 2026

மேலும் 17, 18 ஆகிய இரு தினங்கள் வார இறுதி நாட்கள் என்பதால் இந்த முறை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. வழக்கமாக 2 நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தென் மாநில மாவட்டங்களுக்கு சென்னைவாசிகள் படையெடுப்பார்கள். அந்த வகையில் தசரா மற்றும் ஆயுத பூஜைக்கு இந்தாண்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஆம்னி பேருந்து

ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களும், இயக்கப்பட்டுள்ளது. ரயில்களுக்கு அடுத்து பொதுமக்கள் அதிகம் நம்பி இருப்பது ஆம்னி பேருந்து போக்குவரத்தை தான். ஆனால் விடுமுறை தினங்களை பயன்படுத்தி கட்டண கொள்ளை அடிக்கப்படுவதாக புகார்கள் எழுவதும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்வதும் வழக்கமாக இருக்கிறது.

கூடுதல் கட்டணம்

இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். வழக்கமான நாட்களில் 1000 முதல் 2000 ரூபாய் வரை கட்டணமே இருக்கும் நிலையில் விடுமுறை நாட்களில் பயணிகள் தேவை அதிகரித்துள்ளதாக காரணத்தை காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

பல மடங்கு அதிகரிப்பு

வழக்கமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்வதற்கு 1800 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது 3400 தாண்டி இருக்கிறது. சென்னை நெல்லைக்கு 1400இல் இருந்து 3000 ரூபாய் ஆகும். சென்னை மதுரைக்கு 2500ல் இருந்து 3500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்துள்ளனர்.

பண்டிகை காலம்

வழக்கமாக விமான கட்டணத்தை விட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி வைத்திருக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

அதே நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பிலும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் பயணிகள் தங்கள் புகார்களை 18004256151 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+