ஆதவ் அர்ஜுனாவின் கட்சி பதவி.. அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு சமம்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தவெகவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கட்சிப் பதவி என்பது அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு தான் சமம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருப்பவர்களை கூவி கூவி அழைக்க தவெகவுக்கு கேவலமாக இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட வராதவர் தான் விஜய் என்றும் சாடியுள்ளார்.

அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அதிமுகவில் 1,000க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதிமுகவும், தவெகவும் வேறு வேறு கிடையாது. அதிமுகவினரை தவெகவுக்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் அமைச்சர் செங்கோட்டையன், 15 எம்எல்ஏ தவெக பக்கம் வரப் போகிறார்கள் என்று கூறினார்.

Aadhav Arjuna

இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பண பலம், அதிகார பலத்தை வைத்தே இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. கல்லாப் பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்த அந்த கட்சிகளை கொண்டே, தவெக இப்போது ஆட்சி அமைத்தது. தீயசக்தி தலைமையில் தான் காங்கிரஸ், விசிக உள்ளிட்டோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கல்லாப்பெட்டி கூட்டணியால் தான் விஜய் முதல்வராகினார். ஜனநாயக முறைப்படி தவெக தேர்தலை சந்திக்கவில்லை. அதேபோல் ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இருந்து 2 கிளைச் செயலாளர்கள், 1,400 ஒன்றியச் செயலாளர்கள் வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி கனவு வேண்டுமானால் காணலாம். தவெகவில் பொதுச்செயலாளராக இருப்பதும், அதிமுகவில் கிளைச் செயலாளராக இருப்பதற்கு சமம்.

அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பணியாற்றியவர்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுக பலத்தை நிரூபித்துள்ளது. எம்எல்ஏ-க்கள் தொடங்கி இப்போது கிளைச் செயலாளர் வரை வந்துவிட்டனர். தவெகவில் ஆட்கள் இல்லை போல.. தவெகவில் நிர்வாகிகளும் இல்லை, கிளையும் இல்லை. அதெல்லாம் சினிமா கவர்ச்சியில் வந்த வாக்குகள் தான். ஒன்றிய பகுதிகளில் எந்த அமைப்பும் இல்லை.

அனைத்து மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளும் அதிமுகவுக்காக பாடுபட்டவர்கள். அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, சிதைக்கவோ முடியாது. இதனை செய்ய கேவலமாக இல்லையா.. அடுத்த கட்சிக்காரனை அழைத்து தனது கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிற ஒரே கட்சி தவெக தான். அப்போது தவெகவில் யாரும் இல்லை என்றே அர்த்தம்.. கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தவெக தள்ளப்பட்டுவிட்டது என்று சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+