சவுதியில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து.. சவுதி உச்ச நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழரின் தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மதம் தொடர்பாக பதிவிட்ட கருத்துக்காக விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்த நிலையில், அதை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளை சேர்ந்த பலரும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்கிறார்கள். அப்படி அங்கு வேலைக்கு சென்றவர் தான் இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராசா .. 27 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே சவுதியில் வேலை செய்து வருகிறார்.

Saudi Death Sentence of Sri Lankan Tamil

மரண தண்டனை

இதற்கிடையே இவர் சமீபத்தில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த விவகாரம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரண தண்டனையை குறைக்க வேண்டும் என இலங்கை தமிழ் அமைப்புகள் வலியுறுத்தினர். இதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

இந்த சூழலில் தான் சவுதி அரேபியா உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை எடுத்த இரு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் சட்ட குழுவினருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அடுத்து என்ன

இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.. சிவராசா தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவாரா.. அப்படியானால் எவ்வளவு காலம் சிறையில் இருப்பார்... அல்லது உடனடியாக விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பின்னணி

கடந்த ஜூன் மாத இறுதியில், இந்து யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவர் நாயை எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து இணையத்தில் மதம் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. அப்போது நெட்டிசன் ஒருவர் இந்து தெய்வம் குறித்து இழிவான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த சிவராசா, தமிழில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

அந்த போஸ்ட்டை அவர் உடனடியாக நீக்கிவிட்டு, மன்னிப்பு கோரும் வீடியோவையும் வெளியிட்டார். இருப்பினும், அவரது போஸ்ட்டின் ஸ்கிரீன்ஷாட் அவர் வேலை செய்த நிறுவனத்துக்கும் சவுதி அதிகாரிகளுக்கும் யாரோ அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் சிவராசாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது. இருப்பினும், பின்னர் அது மரண தண்டனையாக மாற்றப்பட்டது.

மரண தண்டனை ரத்து

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் இலங்கை அதிகாரிகள் சவுதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்தே மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை எம்பி ஃபைசர் முஸ்தபா கூறியுள்ளார். செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு சிவராசாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் புகாரளித்திருந்த நிலையில், இந்த மரண தண்டனை ரத்து செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+