மேகதாது அணை.. கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்காதீங்க.. மத்திய அமைச்சரிடம் என். ஆனந்த் - ஆதவ் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், டெல்லியில் ஜல்சக்தி துறை அமைச்சரை, தமிழக அமைச்சர்கள் குழு இன்று சந்தித்தது மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதிக்க கூடாது நேரில் வலியுறுத்தி கடிதம் வழங்கியுள்ளது.

முன்னதாக கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.

Mekedatu dam issue TN Ministers meet jal shakti minister urge not to give permission for karnataka

மேகதாது அணை கட்டியே தீருவோம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறி வருகிறது. அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்து இருந்தார். கர்நாடகாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட தமிழ்நாடு அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலலை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் சந்தித்தனர்.

ஒப்புதல் வழங்கக் கூடாது

இந்த சந்திப்பின் போது, மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்கள். கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய ஜல் சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஒரு காலமும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைளை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:- 'தமிழ்நாட்டின் உரிமையை ஒரு காலமும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அவரும் தெரிவித்துள்ளார்..' என்றார்.

பேச்சுவார்த்தை பாசிட்டிவ் ஆக இருந்தது

தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. தீர்ப்பை மீறி அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சினையை உருவாக்கியுள்ளது என்பதை பதிவு செய்தோம். டிபிஆர் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது. டிபிஆர் கொடுக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், அதை பரிசீலிக்கக் கூடாது என்று பதிவு செய்துள்ளோம்.

விரிவான திட்ட அறிக்கையே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே எந்த முடிவையும் ஜல்சக்தி அமைச்சகம் எடுக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம். மத்திய அமைச்சர் சட்ட ரீதியான அணுகுமுறையை கூர்ந்து கவனித்தார். டிபிஆர் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று எங்களிடம் கூறினார். பேச்சுவார்த்தை பாசிட்டிவ் ஆக இருந்தது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+