பாவம் அவங்க என்ன தான் செய்வாங்க! அதிக விலைக்கு மின்சாரம் ஏன்? தவெக அரசுக்கு ஜிகே வாசன் சப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும், மின் தட்டுப்பாடு இருக்கக் கூடாது, எந்த தரப்பு மக்களுக்கும் எந்த நிலையிலும் மின்வெட்டால் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் தமிழக அரசு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதாகக் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில கட்சி பிரமுகரின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமாக கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு முதல் விற்பனையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமாகாவினர் கலந்து கொண்டனர்.

GK Vasan TVK Electricity

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்," இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. இந்தியாவில் இனி ஜனநாயக முறைப்படி தேர்தல் சரியாக நடக்க வேண்டும்.

ஜிகே வாசன்

அதற்கு தேர்தல் ஆணையத்தினுடைய சீர்திருத்தங்கள் அவசியம். தவெக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கக் கூடாது, எந்த தரப்பு மக்களுக்கும் எந்த நிலையிலும் மின்வெட்டால் தொந்தரவு இருக்கக் கூடாது. குறிப்பாக மின்வெட்டால் சிறு குரு தொழில் பாதிக்கப்படக் கூடாது. இவைகளை முன்வைத்து தற்காலிகமாக அரசு மக்களுக்கு சேவை செய்யக் கூடும் நிலை ஏற்பட வேண்டும்.

அதிக விலை மின்சாரம்

இதற்காகத் தான் இந்த நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த துறையின் அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். மின்வெட்டு என்பதை விட மின் தேவை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை நிலை. அதற்கு ஏற்றவாறுதான் அரசு மின்சார பிரச்சனையை தற்போது சமாளித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் நேற்று அமைச்சருடைய தெளிவான அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது. அதே போல் கடந்த கால மின் சேவை, இன்றைக்கு தேவைப்படும் மின் சேவை அதனையும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

தமிழக அரசு

தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்து தமிழக அரசு மீது பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. மக்கள் சுமையை குறைப்பது முதல் பணியாக இருக்கிறது. படிப்படியாக கடன் சுமையை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு வழிகளிலே பல பணிகளை செய்து கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். அதற்காக ஒரு நிபுணர் குழுவையே போட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு ஏற்ற தாழ்வுகள் எல்லாம் கண்டிப்பாக கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் தான் அரசு செயல்படும். மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய அரசாகத் தான் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மருத்துவ பணியாளர்கள்

மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டாம் என்ற ரீதியிலே அரசு அனைத்து துறைகளிலும் தங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் மருத்துவ பணியாளர்களுடைய போராட்டத்தை கனிவோடு கேட்டு அவருடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+