பாகிஸ்தானில் ஒரிஜினல் துரந்தர்? பட்டப் பகலில் போட்டு தள்ளப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி! யாரிந்த கன்மேன்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களால் பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைகள் அடுத்தடுத்து சுட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லஸ்கரி தைபா அமைப்பின் மூத்த தளபதியான இம்ரான் கானை மர்ம நபர் ஒருவர் பட்டாபகலில் சுட்டு கொலை செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அந்த வீடியோவில் வணிக வளாகத்தில் இருந்து வெளியே வரும் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் அருகில் இருக்கிறார். அப்போது வெள்ளை உடை அணிந்த நர்பர் இருசக்கர வாகனத்தில் வந்தவரை சரமாரியாக துப்பாக்கியால் சுடுகிறார்.

Pakistan Video Lashkar e Taiba

பலமுறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அந்த நபர் அங்கிருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர் லஸ்கர்- இ - தொய்பா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் ஒருவான இம்ரான் தான் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதே நேரத்தில் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள நபர் இம்ரான் தானா? இந்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தான் நடைபெற்றதா போன்ற அதிகாரவ பூர்வ தகவல்கள் இதுவும் வரை உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தளபதிகளில், முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து அடையாளம் தெரியாத நபர்களால் குறி வைத்து சுட்டு கொலை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

துரந்தர் படத்தில் வருவது போல ஏதேனும் ஒரு நாட்டின் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தானின் முக்கிய தளபதி ஒருவர் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். தற்போது இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இம்ரான் லஸ்கர்- இ - தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், அவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் தொடர்பு இருப்பதாகவும் சில சமூக வலைதள வாசிகள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தகவல்களுக்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையோ பஞ்சாப் மாகாண நிர்வாகமோ அல்லது அந்நாட்டு ராணுவமோ அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

மேலும் வீடியோவில் சுடப்பட்ட இம்ரான் உயிரிழந்தாரா அவர் உண்மையில் லஸ்கர்- இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் தானா என்பதும் தெளிவாக தெரியவில்லை. வீடியோவில் அக்டோபர் வீடியோவில் இந்த சம்பவம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காலை 9:54 மணிக்கு நடந்ததாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவில் இடம் பெற்றிருந்த நேரம் உண்மை தானா அல்லது ஏஐ மூலம் நேரம் பதிவிடப்பட்டதா என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்திருக்கிறது. இந்த வீடியோ குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மை தன்மை தெரிய வரும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+