டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க நடந்த சதி.. ஜேசன் போட்ட பிளான்! ரகசியத்தை உடைத்த முத்தழகி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து போன வாரம் முத்தழகி எலிமினேஷன் ஆகி வெளியே வந்த பிறகு, உள்ளே நடந்த பல விஷயங்களைப் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார். அதிலும் டிடிஎஃப் வாசனுக்கு எதிராக முகேஷிடம் ஜேசன் போட்ட பிளானை பற்றி முத்தழகி பேசி இருக்கிறார். போன வாரத்தில் ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசன் இருவருக்கும் நடந்த சண்டை பெரிதாக பேசப்பட்டது. அப்போது கூட ஜேசன், வாசனை அடிக்க பாய்ந்திருந்தார். அதற்கு பின்னாடி என்ன பிளான் நடந்தது என்பதை பற்றி தான் முத்தழகி பேசியிருக்கிறார்.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ன நடக்கும் என்பதை யாராலும் எதிர்பார்க்கவே முடியாதது. உள்ளே ஒருநாள் அடித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் அடுத்த நிமிடமே மாமன், மச்சான் என்று கொஞ்சி குலாவுவதை பார்க்க முடியும். அதே நேரத்தில் சிலர் நீதாயா என் உசுரு என்பது போல முகத்துக்கு நேராக பாவனை செய்து கொண்டு இருப்பார்கள், ஆனால் நாமினேஷனில் போய் முதுகில் குத்திக்கொண்டு வருவார்கள். இப்படி பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
மன்னித்த விஜய் சேதுபதி
ஆனால் போன வாரம் ஜேசனை வாசனை அடிக்க பாய்ந்தது பெரிதாக பேசப்பட்டது. அப்போது ரசிகர்கள், "இந்த வாரம் ஜேசனுக்கு எப்படியாவது ரெட் கார்டு கொடுக்க வேண்டும், அவர் தப்பு மீது தப்பு செய்து கொண்டிருக்கிறார். யாரையும் மதிப்பதில்லை, எப்போதுமே திமிராக நடந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு தொகுப்பாளராக வந்த ரம்யா கிருஷ்ணன் முன்பே அவரை அவமானப்படுத்துவது போல செய்கை செய்திருந்தார். அதுபோல விஜய் சேதுபதியையும் ஒரு வாரமும் அவர் மதிப்பதில்லை அதனால் இவரை வெளியேற்ற வேண்டும்" என்று பலரும் குரல் கொடுத்தனர்.
பிக் பாஸ் செயல்பாடு
போன வார கடைசியில் விஜய் சேதுபதி முதலில் இவரின் ரியாக்ஷனுக்கு வார்னிங் கொடுத்து இருந்தார். ஆனால் கடைசியில் நானே இந்த நிகழ்ச்சியில் இருந்து போறேன் என்று ஜேசன் சொன்ன பிறகு கூட அவரை வெளியே அனுப்பாமல் பிக் பாஸ் அவரிடம் சமரசம் பேசி அவரை உள்ளே வைத்திருக்கிறார்கள். கண்டன்டுக்காக இப்படி செய்கிறார்களா? ஜேசன் போய்விட்டால் டிஆர்பி இருக்காது என்று நினைத்து விட்டார்களா? என்று இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் எல்லோரும் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

முத்தழகி சொன்ன விஷயம்
ஆனால் போன வாரம் நடந்த சண்டைக்கு பின்னாடி ஜேசன் போட்ட பிளான் இருக்கிறது என்று முத்தழகி சொல்லி இருக்கிறார். அதாவது "ஜேசனும், முகேஷும் சேர்ந்து டிடிஎஃப் வாசனை கோபப்படுத்தி அவரை கை நீட்ட வைத்து விட வேண்டும், அப்படி செய்யும்போது அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவார்கள். என்று ஜேசன் தான் முகேஷிடம் பிளான் சொன்னார். அதற்கு முகேஷ் ஓகே சொல்லி இருந்தார். அதற்கு பிறகு தான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் தெரியாமல் ஜேசன் மூக்கில் டிடிஎஃப் வாசன் கை பட்டுவிட்டது. உடனே ஜேசன் அடிக்க போன விஷயம் கூட அந்த காரணம் தான்" என்று முத்தழகி சொல்லி இருக்கிறார்.
பாராட்டை ஏற்றுக்கொள்ள முடியாது
வார கடைசியில் ஜேசன் பிளான் எல்லோருக்கும் தெரிந்து அவரை திட்டி விட்டதால் அவர் வேற வழியில்லாமல் தான் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து பார்த்தவர்களுக்கு ஜேசனின் ஆட்டிட்யூட் தெரியும். அவருடன் நட்பாக இருக்கும் மற்ற போட்டியாளர்கள் யாருக்கேனும் பாராட்டு வந்தால் ஜேசனால் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே கோபமான ரியாக்ஷன் கொடுப்பார் அல்லது முகத்தை சுளித்தபடி ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுப்பார். அந்த வீட்டிற்குள் கரிஷ்மா இருந்த வரைக்கும் ஜேசனுக்கு அடிக்கடி பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்.
டைட்டில் வின்னர் யார்
இப்போ கரிஷ்மா எவிக்சன் ஆன பிறகு, என்னை மிஞ்ச யாருமே இல்லை என்பது போல ஜெய்சன் ஒட்டுமொத்த வீட்டையும் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் கடைசியில் ஜேசன் கையில் கப்பை கொடுத்து விடுவார்கள் போல. ஆனால் வாசன் ரசிகர்கள் எங்க வாசனுக்கு தான் கப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாசன் கூட உள்ளே பல இடங்களில் இதை சொல்லி இருக்கிறார். ஆனால் ஜேசன் என்னதான் விள்ளத்தனமாக செய்து கொண்டு இருந்தாலும் அவரை மீண்டும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்துக் கொண்டே இருப்பதை பார்க்கும்போது அவர்தான் எந்த சீசன் டைட்டில் வின்னர் என்பது போல தெரிகிறது. சரி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




Click it and Unblock the Notifications
