மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு!
சென்னை: ஏழை எளிய சாமானிய மக்களின், மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சம்தான், 'ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்'. இந்த காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு தற்போது முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறது.
தற்போதுவரை, இந்த இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை பெறுபவர்கள், காப்பீட்டு தொகை அங்கீகரிக்கப்படும் வரை மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இனி வரும் நாட்களில் இதனை தானியங்கி முறைக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்
எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசால் வழங்கப்படும் மருத்துவ காப்பீடுதான் 'ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்'. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சையை இலவசமாக செய்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, இதில் சேர வயது வரம்போ, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கோ கட்டுப்பாடுகள் கிடையாது என்பதுதான்.
புதிய அப்டேட்
இந்த இன்சூரன்ஸ்படி, சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தற்போது சில சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அதாவது, சிகிச்சை செலவுகள் ஏற்கப்படும் வரை, சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், எப்போது சிகிச்சை முடியும் என்று காத்திருப்பார்கள். இப்படி சிகிச்சை முடிந்தும் இன்சூரன்ஸ் தொகை கிளியர் ஆகும் வரை காத்திருப்பது கடுப்பாக இருக்கும். இந்த சிக்கலை சரி செய்ய இனி தானியங்கி முறையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
பயனாளர்களுக்கு பெரிய நிம்மதி
மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, இனி மருத்துவமனையில் காப்பீடு தொகை கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தனியங்கி முறையை அமல்படுத்த, தேசிய சுகாதார ஆணையம் சார்பில் சிறப்பு போட்டி நடத்தப்படுகிறது. பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடைபெறும் இந்த போட்டியின் மூலம், கோடிக்கணக்கான டேட்டாக்களை சீக்கிரமாகவும், பிழையின்றியும் கையாளக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
தானியங்கி முறை எவ்வளவு சீக்கிரம் அமல்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் நோயாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications