ஆயுதபூஜை ஸ்பெஷல் பஸ்.. லீவு எடுக்கக்கூடாது.. டிரைவர் கண்டக்டர்களுக்கு போக்குவரத்துறை வார்னிங்
சென்னை: ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அளித்துள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது; மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமியை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக,சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அளித்துள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது; மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது. மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ஆப்ஷன் ரிப்போர்ட் அனுப்பி சட்டப்பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் இந்த சுற்றறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications