ஒரே கூட்டம்.. சென்னை, செங்கல்பட்டு ஐயப்பன் கோயில்களில் இருமுடி கட்டிசெல்லும் பக்தர்கள்.. என்ன காரணம்
சென்னை, செங்கல்பட்டு ஐயப்ப கோவில்களில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்
சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை சபரிமலை கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்டு வருவதால், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சென்று கொண்டிருக்கிறார்கள்..
சபரிமலையில் இது சீசன்.. அதனால் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.. மேலும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வார்கள்.
ஆனால், இப்போது தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், முன்புபோல் அனைவருக்கும் அனுமதி இல்லை. இதனால், சில ஆயிரம் பக்தர்கள் மட்டுமே இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள்.. அதுவும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்... இதனிடையே சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதியானது.. அதனாலேயே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன்
அதுகூட ஆன்-லைனில் ரிசர்வ் செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி தருகிறார்கள்.. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை... இதைதவிர, 24 மணி நேரத்துக்குள் செய்து கொண்ட கொரோனா டெஸ்ட் சர்ட்டிபிகேட் கையோடு கொண்டு வர வேண்டும்.. அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு சென்றாலும் நெய் அபிஷேகத்துக்கு அனுமதி கிடையாதாம். இதுபோன்ற காரணங்களினால், இந்த வருஷம் மாலை போடுவதையே பல பக்தர்கள் தவிர்த்துவிட்டனர்.. மேலும் பலர் வீடுகளிலேயே விரதம் மேற்கொண்டு ஐயப்பன் பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை
மேலும் பலர், 18 படிகளுடன் அமைந்துள்ள உள்ளூர் ஐயப்பன் கோவில்களுக்கு இருமுடி கட்டி சென்று வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் மடிப்பாக்கம், அம்பத்தூர், செங்கல்பட்டு, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் 18 படிகளை கொண்ட ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன... இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் இங்குதான் கடந்த 2 வாரமாக சென்று வருகின்றனர். இந்த மாத கடைசியில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என கூறப்படுகிறது.

பக்தர்கள்
இதேபோல் ராஜா அண்ணாமலைபுரம், அம்பத்தூர், செங்கல்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இருமுடி கட்டி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இதில், மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலில் சபரிமலை கோவில் விதிகளின்படியே தினசரி வழிபாடுகள் நடத்தப்படுகிறது... ஆனால், கோவில் மேல் தளத்துக்கு சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது.

விதிமுறைகள்
இருமுடிகட்டி வரும் பக்தர்கள் பதினெட்டு படி வழியாக ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், படியேறி சென்றதும் இருமுடியை பிரிப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது என்றும், அபிஷேக நெய்யை சன்னிதானத்தில் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications