இறுதியான லிஸ்ட்? பாஜக தேர்தலில் களமிறங்க போகும் பெரும் தலைகள்! தமிழ்நாட்டிற்கு பறக்கும் பெரிய புள்ளி
சென்னை: பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னைக்கு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுப்பதற்காக வருகிறார் சந்தோஷ்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.

இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்தது.
மோடி வருகை: இந்த நிலையில்தான் சமீபத்தில் திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில். 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.
விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது, என்று திருச்சி பயணத்தில் மோடி கூறினார்.
மோடி - எடப்பாடி மோதல்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அப்படி சந்திப்பு நடத்தவில்லை. அதோடு இல்லாமல் மோடி வருகைக்கு முன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி.. பாஜகவும் இனி கூட்டணியே இல்லை என்று அடித்து கூறினார்.
பி எல் சந்தோஷ் வருகை: பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னைக்கு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுப்பதற்காக வருகிறார் சந்தோஷ். மோடி மற்றும் அமித்ஷாவின் உத்தரவின்படி, இம்மாதம் 12-ந்தேதி சென்னைக்கு விசிட் அடிக்கிறார் சந்தோஷ்.
சென்னைக்கு வரும் சந்தோஷ், தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர்களுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த ஆலோசனையில், பாஜக நிர்வாகிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்கள், கூட்டணி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிக்கிறாராம் சந்தோஷ்.
தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜகவிற்கான செயல் திட்டம் குறித்த ஒரு ரிப்போர்ட்டை தேசிய தலைமை தயாரித்திருக்கிறதாம். அந்த அறிக்கையின்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.












Click it and Unblock the Notifications