ஓ மை காட்.. லேப்டாப் முழுசும் நிர்வாண வீடியோ..11 பெண்களை மிரட்டியே.. கைதான இளைஞரின் பகீர் பின்னணி!
11 பெண்களை இளைஞர் மிரட்டி பணம் பறித்துள்ளார்
சென்னை: நெட் சென்டருக்கு வரும் பெண்களை சாய் விட்டு வைத்ததே இல்லையாம்.. ஆபாச போட்டோக்கள், நிர்வாண வீடியோக்களை எடுத்து.. 11 பேரை சீரழித்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் இந்த ஹைடெக் இளைஞர்!
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன்னுடைய அம்மாவின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்.. தன்னுடைய நிறைய போட்டோக்களையும் இதில் ஷேர் செய்துள்ளார்.
சின்ன பெண் என்பதால், விதவிதமாக டிரஸ்களை அணிவதும், அதை உடனே இன்ஸ்டாகிராமில் போடுவதுமாக இருந்துள்ளார்.. இவரது ஃபாலோயர் ஒருத்தர் ஏகப்பட்ட லைக்குகளை சிறுமிக்கு போட்டுக் கொண்டே இருப்பார்.. சிறுமியை வர்ணித்து, புகழ்ந்து கமெண்ட்களும் குவிந்தபடியே இருக்கும். எப்படி எப்படியோ முயற்சி செய்து, கடைசியில் இந்த பெண்ணின் போன் நம்பரை வாங்கிவிட்டார்.. பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

போட்டோக்கள்
இனிக்க இனிக்க பேசியதால், இன்ஸ்டாகிராம் தனி அக்கவுண்ட்டில் போட்டோக்களை அனுப்பிவைக்க ஆரம்பித்தார் இந்த மாணவி.. இந்த போட்டோக்களை வைத்து கொண்டு சிறுமியை படுக்கைக்கு அழைக்க.. மிரண்டு போன அந்த சிறுமி அந்த நபரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

2 லட்சம் ரூபாய்
இதற்கு பிறகு மிரட்டல் ஆரம்பமானது.. இஷ்டப்படி கேட்காவிட்டால், அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டுவிடுவேன்.. இல்லையென்றால் 2 லட்சம் கொடு என்று மிரட்ட ஆரம்பித்தார்.. இந்த மிரட்டல் சிறுமியிடம் இல்லை.. அவரது அம்மாவிடம்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய், வண்ணாரபேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசரை சந்தித்து இந்த மிரட்டல் பற்றி கூறியுள்ளார். அதற்கு அவர், "2 லட்சம் தரேன்னு சொல்லி வர வைங்க" என்று ஐடியா தரவும், அதன்படியே வரவழைக்கப்பட்டார் அந்த இளைஞர்!

பட்டதாரி
அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.. விசாரணையில், இவர் பெயர் சாய் என்கிற சாய் சிவசுந்தரம் என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.. இவர் ஒரு பிடெக் பட்டதாரியாம்.. மொத்தம் 11 பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர்.. பணம் தர முடியாத ஏழை பெண்கள் என்றால், பெண்கள் படிந்தால் காம இச்சைக்கு பயன்படுத்தி கொள்வது.. இதுதான் இவர் தொழில். ஒரு லேப்டாப்பை கூடவே வைத்திருக்கிறார் சாய்.. அதில், ஆய்வு செய்தபோதுதான் 10 பெண்களின் அந்தரங்க போட்டோக்களும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சாய் பற்றின பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வீடியோ கேம்
சம்பந்தப்பட்ட சிறுமியுடன் சாய்-க்கு 10 மாசமாதான் பழக்கமாம்.. ஆன்லைனில் கேம் விளையாடியபோதுதான், சாயும் கேம் விளையாடியுள்ளார்.. அப்போது நண்பர்களாக அறிமுகமாகி உள்ளனர்.. ஆனால் சாய் தன் உண்மையான பெயரை சொல்லவில்லை.. சஞ்சய் என்றும், 12-ம் கிளாஸ் படிப்பதாகவும் சொல்லி பழகி உள்ளார்.

நிர்வாண போட்டோ
ஒரே வயது என்பதால் நிறைய விஷயங்களை மாணவி பகிர்ந்து கொண்டுள்ளார்.. வீடியோ கால்கூட இருவரும் பேசியுள்ளனர்.. அம்மா வீட்டில் இல்லாத போது இந்த சிறுமிக்கு சாயிடம் வீடியோ கால் செய்து பேசுவதுதான் வழக்கம்.. அப்போதுதான் விதவிதமான போட்டோக்களை அனுப்புமாறு சாய் கேட்கவும், சிறுமியும் டிசைன் டிசைனாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார். இதில் நிர்வாண போட்டோக்களும் அடக்கம்!

பிளாக்மெயில்
"ஒருநாள்.. உன்னை நேரில் பார்க்க வேண்டும்.. கோம்பேட்டுக்கு வா" என்று கூப்பிடவும் சிறுமி மறுத்துள்ளார்.. அப்போதுதான் நிர்வாண போட்டோக்களை வெளியிடுவேன் என்ற மிரட்டலுடம் ஆரம்பமாகி உள்ளது. பயந்து போன சிறுமி போனை பிளாக் செய்துவிடவும்.. ஆத்திரமடைந்த சாய், சிறுமியின் அம்மாவுக்கு சில மகளின் நிர்வாண போட்டோக்கள் சிலவற்றை அனுப்பி இருக்கிறார்.. இதை பார்த்து பதறிபோன தா.ய், மகளிடம் என்ன ஏதென்று கேட்கவும்தான் எல்லாவற்றையும் அழுதபடியே சிறுமி சொன்னாள்.. இதன்பிறகுதான் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் தந்து.. கைது நடவடிக்கை எல்லாம்!

ஆவணங்கள்
சாய்க்கு கல்யாணமாகி 3 மாசத்தில் ஒரு குழந்தை இருக்கிறதாம்.. இவரது மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.. சென்னையில் தனியாக தங்கியிருந்தபோது, ஆவடி, திருமுல்லைவாயில், மடிப்பாக்கம், சேலையூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் சாய் நெட் சென்டர் ஒன்றையும் நடத்திவந்துள்ளார். வழக்கமாக சென்டருக்கு வரும் பெண்கள் தங்களின் ஆவணங்கள், போட்டோ, செல்போன் நம்பர் தருவது வழக்கம்.
Recommended Video

தகவல்கள்
அப்படித்தான் சாய் நடத்தி வரும் சென்டருக்கு வந்த பெண்களும் விவரங்களை தந்துள்ளனர்.. அந்த நம்பரை வைத்து கொண்டு, பெண்களிடம் பேசி நைசாக வலையில் விழ வைப்பாராம்.. சென்டரில் இருக்கும்போது, அவர்களுக்கே தெரியாமல், வீடியோ, போட்டோ எடுத்து விடுவாராம்.. அந்த போட்டோக்களை மார்ப் செய்து.. பெண்களை மிரட்டி பணம் பறிப்பாராம்... இதை தவிர மேலும் பல தகவல்களை போலீசார் சாயிடம் பெற்று கொண்டு இருக்கிறார்கள்!
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications