'பாஷ்யம்' பெயர் அதிரடி நீக்கம்.. இனி "கோயம்பேடு மெட்ரோ" மட்டுமே.. மாறிய காட்சிகள்
சென்னை :கோயம்பெடு மெட்ரோ நிலையம் அண்மையில் புனரமைக்கப்பட்டது. தற்போது கோயம்பெடு மெட்ரோ நிலையத்தின் முன்பு இருந்த பாஷ்யம் என்ற பெயர் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " எனப் பெயர் மாற்றப்பட்டது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ " யார் இந்த பாஷ்யம், தமிழகத்திற்கு செய்த தியாகம் என்ன " என மெட்ரோ ரயில் பெயர் மாற்றத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

பெயருக்கு என்ன காரணம்
" பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " பெயர் வருவதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் சில தகவலகள் வேகமாக பரவின. அதாவது யார் இந்த "பாஷ்யம்" ?. பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா 1932-ம் ஆண்டில் வெள்ளையன் ஆட்சியில் தனி ஆளாக சென்னை கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் என்றும், அவரின் நினைவாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பெயர் மாற்றப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது

விளம்பரதாரர்
ஆனால் சமுக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்பது பின்னாளில் சென்னை மெட்ரோ அளித்த விளக்கத்தில் தெரியவந்தது.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " எனப் பெயர் மாற்றப்பட்டதற்கு பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனம் கோயம்பேடு மெட்ரோவின் விளம்பரதாரராக சேர்ந்ததுதான் காரணம் என்பது தெரியவந்தது.

விளம்பரம் கிடைத்தது
நந்தனம் மற்றும் ஏஜி-டிஎம்ஸ் மெட்ரோ நிலையங்களுக்கு அடுத்து கோயம்பேடு நிலையத்திற்கும் விளம்பரதாரர் கிடைத்தார். ரயில் நிலையத்துடன் நிறுவனத்தின் பெயரை சேர்த்து விளம்பரம் செய்யும் உரிமை (செமி நேமிங் உரிமம்) கிடைத்தது. அதாவது. கோயம்பேடு நிலையத்திற்கான செமி நேமிங் உரிமத்திற்கான ஒப்பந்ததை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் பெற்றது. அதனால் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் அப்போது விளக்கம் அளித்தார்கள்.அதன்பிறகு சர்ச்சை ஓய்ந்தது.

மாறிய பெயர் பலகை
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் புணரமைக்கப்பட்டது. புணரமைக்கப்பட்ட பின்னர் " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " என்ற பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ என்று மீண்டும் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications