பாபா வங்கா கணிப்பு! நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எகிறும் தங்கம் விலை! கலங்கும் நடுத்தர மக்கள்
சென்னை: இந்த ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 2.1 லட்சம் வரை விற்பனையாகும் என பாபா வங்கா கணித்துள்ளார். திருமண சீசன் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும் இவ்வேளையில், தங்கம் தொடர்பான கணிப்புகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் தங்கம் வெறும் ஆபரணமன்று; அது மங்களகரமான பொருளாகப் பார்க்கப்படுகிறது. போர்ச் சூழல் தங்கத்தின் விலையை சாதாரண மக்கள் வாங்க முடியாத உயரத்திற்கு உயர்த்திடுமோ என்ற கவலையைத் தூண்டிவிட்டுள்ளது.

தற்போது சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், இதுவொரு பெரும் ஏற்றத்திற்கு முந்தைய தற்காலிக அமைதியா என்பது முதலீட்டாளர்களிடையே உள்ள மிகப்பெரிய குழப்பம். இந்த சூழலில், உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா விடுத்திருக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை இப்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது கணிப்பு என்ன என்று பார்ப்போம்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. "பால்கன் நாடுகளின் நோஸ்ட்ராடாமஸ்" என அழைக்கப்படும் இவர், உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். பார்வை மாற்றுத்திறனாளியான பாபா வாங்கா, 1911ஆம் ஆண்டு பிறந்து, 1996ஆம் ஆண்டு தனது 84வது வயதில் உயிரிழந்தார். இவர் 5079-ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளைக் கணித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாபா வங்காவின் 2026-ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை தற்போது வைரலாகி வருகின்றன. அவரது கணிப்பின்படி, இந்தாண்டு உலகம் முழுவதும் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்படும், வங்கி அமைப்பு சரிந்துவிடும். மக்கள் காகித நாணயத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும்போது அனைவரும் தங்கத்தை நாடுவார்கள். இதன் விளைவாக, தங்கத்தின் விலை நாம் கற்பனை செய்ய முடியாத உயரத்திற்கு உயரும் அபாயம் உள்ளது.
பாபா வங்காவின் மதிப்பீடுகளின்படி, ஒரு பொருளாதார வீழ்ச்சியின்போது தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கணக்கீடு உண்மையானால், தற்போதைய விலையில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹1.9 லட்சம் முதல் ₹2.1 லட்சம் வரை எட்டக்கூடும். இது நம்ப முடியாதது போலத் தோன்றினாலும், இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்தால், சந்தையில் இந்த அளவிலான பெரும் மாற்றம் நிகழக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பொதுவாக, உலகில் போர்ச் சூழல் ஏற்படும் போதெல்லாம், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாகக் கருதி அதில் முதலீடு செய்யத் தொடங்குகின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டங்கள் இருந்தபோதிலும், விலையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய சரிவு நிதி ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது, விலை உயர்வுக்கு முந்தைய தற்காலிக அமைதியாக இருக்கலாம் எனப் பலர் கருதுகின்றனர்.
திருமணங்கள் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில், இத்தகைய கணிப்புகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிக பதற்றத்தை உருவாக்கியுள்ளன. ஒரு சவரன் தங்கம் ₹2 லட்சத்தைத் தாண்டினால், அது சாமானிய மக்களின் வாங்கும் கனவை எட்டாக் கனியாக்கிவிடும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.
பாபா வங்காவின் கணிப்புகள் எதுவாக இருந்தாலும், தங்கத்தின் விலை வெறும் வதந்திகளால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை என சந்தை வல்லுநர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் முடிவுகள், ரூபாயின் மதிப்புச் சரிவு மற்றும் பணவீக்கம் ஆகியவையும் தங்கத்தின் விலையை அதிகரிக்கின்றன. போர்ச் சூழல் முடிவுக்கு வந்தால், விலை மீண்டும் இயல்பு நிலைக்குக் குறைய வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, வெறும் கணிப்புகளுக்கு அஞ்சி அவசரப்பட்டு பெரிய முதலீடுகளைச் செய்யாமல், தற்போதைய சந்தை நிலவரங்களைக் கவனமாகக் கண்காணிப்பது முக்கியம். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடுதான் என்றாலும், உங்கள் தனிப்பட்ட நிதித் திட்டத்திற்கு ஏற்ப முடிவெடுப்பது நல்லது. சந்தை விலைகள் குறையும்போது, படிப்படியாகத் தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாக அமையும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications