தங்கம் ஜொலிக்குது! தங்க நகை மேலும் உயர போகுது? உலகப்போர் அச்சம்! 2026 பற்றி பாபா வங்கா என்ன சொன்னார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு துவங்கி உள்ள நிலையில், தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துவிட்டு போயுள்ள ஒரு கணிப்பு ஒன்று இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என்றும் கணித்துள்ள நிலையில், உலக போர்களுக்கான சாத்தியக்கூறுகளையும் பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளதும், இணையத்தில் விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள், கணினி, சிறிய மின்னணு சாதனங்கள், மற்றும் ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை மனிதர்கள் அதிகமாக சார்ந்திருப்பார்கள். மனிதர்கள் சிறிய மின்னணு சாதனங்களை அதிகமாகச் சார்ந்திருப்பார்கள், அந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் போன்றவற்றை மாற்றக்கூடும்..

தீர்க்கதரிசி பாபா வங்கா

இந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதித்து, மன அழுத்தம், கவலை, தூக்கக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவார்கள்.

2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி ஏலியன்களை நேரக்கு நேர் சந்திப்பார்கள்., பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பெரிய, மர்மமான விண்கலம் நுழையும். அது மனித வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றெல்லாம் ஏற்கனவே கணித்துள்ளார்..

ரஷ்ய அதிபர் வீழ்ச்சி

இந்நிலையில், 2026ம் ஆண்டுகுறித்த அவரது மேலும் சில கணிப்புகள் தற்போது உலகளவில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அது, 2026ம் ஆண்டு ரஷிய அதிபர் புதினின் வீழ்ச்சி தொடங்கும் என பாபா வங்கா தெரிவித்ததாக கூறப்படும் கணிப்புதான்.

2026 பாபா வங்கா கணிப்பு

கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக புதின் ரஷியாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த நீண்ட கால அரசியல் பயணத்தில் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள், ஆட்சி கவிழ்ப்புகள், அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ரஷியாவில் மட்டும் இதுவரை அதிபர் மாற்றம் ஏற்படவில்லை.

ஆனால், 2026ம் ஆண்டில் ரஷியாவில் புதிய தலைவர் ஒருவரின் எழுச்சி இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் புதினின் ஆட்சி முடிவுக்கு வரக்கூடும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யா-அமெரிக்கா

அதே நேரத்தில், அடுத்தாண்டு உலக நாடுகளுக்கிடையே கடுமையான போர் மூளும் என்றும் கூறப்படுகிறது. தைவானை சீனா கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாகவும், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டும் என்றும் இதன் விளைவாக உலகளாவிய போர் உருவாகலாம் என்றும், அது மூன்றாம் உலகப்போராக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அதேபோல இயற்கை சீற்றங்களால் பூமியின் எட்டு சதவீத பகுதி கடுமையாக பாதிக்கப்படுமாம்.. நிதி சார்ந்த சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும் பங்குச்சந்தைகளில் சரிவு, நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் இதன் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடையும் என்றும் கூறப்படுகிறது.

கிளம்பியது விவாதங்கள்

மொத்தத்தில், 2026ம் ஆண்டை குறித்து பாபா வங்காவின் கணிப்புகளில் பெரும்பாலானவை எதிர்மறையானவையாகவே உள்ளன. ஆனாலும் இவை அனைத்தும் நிச்சயமாக நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பாபா வங்காவின் இந்த கணிப்புகளை சிலர் வெறும் நம்பிக்கையற்ற ஊகங்களாகவே கருதுகின்றனர் என்றாலும், சோஷியல் மீடியாவில் இந்த விவகாரம் குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் அனைவரும் இவ்வாறான கணிப்புகளை ஆதாரங்களுடன் மட்டுமே அணுக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+