சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெல்மெட் போடாதது மட்டுமல்ல.. வாகன ஓட்டிகள் உயிரிழக்க மோசமான சாலைகளும் ஒரு காரணம்.. ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, மோசமான சாலைகளும் ஒரு காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Bad roads are also a cause of death for motorists: says madras high court

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ. ஜி சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளதாகவும், இக்காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3535 பேர் பலியாகியுள்ளதாகவும், ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள்,இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல எனவும், சாலையின் தரமும், சாலையை முறையாக பராமரிக்காததும் காரணம் எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாக பராமரிப்பது குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை விசாரானையை 2020 ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

English summary
Bad roads are a cause of death for two-wheelers not only helmet : says madras high court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X