ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பில்லை.. பகுஜன் சமாஜ் ஆனந்தன் பேட்டி..!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞரான ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பில்லை என அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் ஆனந்தன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு, பின்னர் பெரம்பூர் அரசு பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்பட்டது.
கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, தாமாக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், விவகாரம், பெரிதாகி வருகிறது. இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் நியமித்து அக்கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பில்லை என அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் ஆனந்தன்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தன்,"ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியும் புகழ்ச்சியும் சில அரசியல் கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு மூளையாக ஒருவர் செயல்பட்டு இருக்கின்றார். உதாரணத்திற்கு ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கின் கொலை நடந்ததாக காவல்துறையினர் கூறியிருந்தனர். இதனை முன்னாள் காவல் ஆணையர் பேட்டியாக சொல்லியிருந்தார்.
ஆற்காடு சுரேஷ் எங்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு அமைப்பில் இருந்தவர், எங்களோடு தோளோடு தோளாக நின்று இருந்தவர். இன்றளவிலும் ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த விரோதமும் கிடையாது. தவறுதலாக ஊடகங்களும் போலீசாரும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பதிலுக்கு பதிலாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
ஆற்காடு சுரேஷ்-ஐ கொலை செய்ததாக கூறப்படும் ஜெயபால் கடந்த எட்டு ஒன்பது மாதங்களில் ஒரு நாளும் ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்தது இல்லை. தொலைபேசியில் பேசியதில்லை. எந்தவிதமான தொடர்பும் இல்லை இது தொடர்பாக ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என உளவுத்துறையிடம் கேட்டபோது சென்னை காவல். ஆணையராக இருந்த சந்தீர் ராய் ரத்தோர் பதில் அனுப்பி இருக்கிறார். அதில் எந்த தொடர்பும் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் குலைக்கும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரே அறிக்கை அனுப்பியிருக்கிறார்" என பேசியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications