பணத்தை திருப்பி கொடுத்து சமரசம்.. இல்லாத கவுன்சிலில் பதவி பெற பணம் பெற்ற வழக்கு: ஜாமீன் மறுப்பு!
சென்னை: சேலத்தில் நடிகை நமீதா, அவரது கணவர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் (MSME Council) என்ற அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா, அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த அமைப்பின் மாநில தலைவராக வீரேந்திர சவுத்ரி உள்ளார். அரசு முத்திரை, தேசியக்கொடி, பிரதமர் படம், எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதை நம்பி சிறு குறு முதலீட்டாளர்கள் அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் தந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
அப்படி தன்னிடம் இருந்து 50 லட்ச ரூபாயை வசூலித்த முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர், அதில் 9 லட்சம் ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்த நிலையில் மீதத் தொகையை திருப்பி வழங்கவில்லை என சூரமங்கலம் காவல் துறையில் கோபால்சாமி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் ஆஜராகி, மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், காவல்துறை மிகைப்படுத்தி காட்டி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் எந்த மோசடியும் இல்லை, பணம் வாங்கிய புகாரில் பணத்தைத் திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறக்கட்டளைக்கு மத்திய, மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதுபோன்ற பெயரைக் கொண்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் எனக்கூறி பிரதமரின் புகைப்படம், அரசின் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளதால், அரசின் முக்கிய பிரமுகர் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மத்திய - மாநில அரசுகளின் எந்த அங்கீகாரமும் இல்லாத ஒரு அமைப்பு, அரசின் சின்னங்களைப் பயன்படுத்துவதும், பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல மாயத் தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது எனக் கூறி இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications