அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு இன்று விசாரணை.. சரவணன் சரண் அடைந்தது சாதகமாக மாறுமா?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத்தருவதாகக்கூறி கட்சி நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதாகி சிறையில் உள்ளார். இவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத்தருவதாகக்கூறி கட்சி நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பி.டி.அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சரவணன், ராஜா, சுரேஷ், தினேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் பல நாட்களாக தலைமறைவாக இருந்த காரணத்தால் அன்பில் மகேஷ் அப்போது கைதானார். அன்பில் கைதான சில நாட்களிலேயே முத்துக்குமார் சரண் அடைந்தார். இந்த சூழலில் கைதாகி சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி அண்மையில தள்ளுபடி செய்திருந்தது. அப்போது நீதிபதி கூறும் போது, அன்பில் மகேஸின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மின்னணு மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மோசடி, மிரட்டல், கட்சி நிதி என்ற பெயரில் பெரும் தொகையை வசூலித்து இருப்பது மிகப்பெரிய பொருளாதார குற்றம் ஆகும்.
அரசகுமாரின் குற்றப் பின்னணி, அன்பில் மகேஸின் கைதுக்குப் பிறகு திடீரென முத்துக்குமார் தானாக முன்வந்து நீதிமன்றத்தி்ல் சரண் அடைந்திருப்பது இந்த குற்ற வழக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது. மிரட்டி, கட்டாயப்படுத்தி லஞ்சம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுவதால், இந்தச் சூழலில் தனியார் பள்ளி நிர்வாகிகளை ஆரம்ப கட்டத்திலேயே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இணை குற்றவாளிகளாகக் கருத முடியாது.
இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியிருப்பதாகவும், சமுதாயத்தில் அரசியல் பின்புலத்துடன் கூடிய செல்வாக்கு மிக்க நபரான அன்பில் மகேஸூக்கு ஜாமீன் வழங்கினால் அது புலன் விசாரணையை வெகுவாக பாதிக்கும் என்றும், சரண்டராகியுள்ள முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அன்பில் மகேஸிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல் துறையின் வாதத்தையும் புறம் தள்ளிவிட முடியாது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஸின் தனிப்பட்ட நலனை விட பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பொதுநலனே முக்கியமானது. எனவே தற்போதுள்ள சூழலில் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார். இந்த சூழலில் வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த சரவணன் பெயரை சொல்லி தான் காவல்துறை ஜாமீனுக்கு எதிரப்பு தெரிவித்தது. தற்போது சரவணணும் சரணடைந்துள்ளார். முத்துக்குமார், சரவணன் இருவருமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணனிடம், அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, ஜாமீன் கோரும் மனுவுக்கு எண்ணிடும் பணிகள் முடிந்தால் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கூறினார்.. அதேபோல, அன்பில் மகேஷ் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
