இன்று பிறை தெரியவில்லை.. ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை- தமிழக தலைமை காஜி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாஹீத்தீன் அய்யூபி இன்று அறிவித்துள்ளார். இன்று பிறை தென்பாடாத காரணத்தால் ஆகஸ்ட் 1ல் பக்ரீத் கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை மாதம் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால், வியாழக்கிழமை ஆங்கில மாதம் ஜூலை 23 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தேதி, சனிக்கிழமை கொண்டாடப்படும்.












Click it and Unblock the Notifications