எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு
சென்னை: எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய புரஸ்கார் விருதும், 50 ஆயிரம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது.

குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி விருதுதான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் எஸ் பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே பத்திரிகையாளர், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் , நமது மன்றத்தின் உறுப்பினர் யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.
குழந்தை இலக்கியத்திற்காக அளிக்கப்படும் இந்த சாகித்ய அகாதமி விருது , நம்முடைய பத்திரிகையாளர் பாலபாரதிக்கு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. பத்திரிகையாளர் யெஸ். பாலபாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வாழ்த்தியுள்ளது.
இந்த விருது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய எழுத்தாளர் எஸ். பாலபாரதி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலை தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.
பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளேன். இந்த நூல் முதல் பதிப்பு விற்று தீர்ந்து மீண்டும் மறுமதிப்பு வெளியிடப்பட்டது. மரப்பாச்சி பொம்மை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications