இனி ரோட்டுல பள்ளம் தோண்டக் கூடாது.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு! பின்னணி என்ன?
சென்னை: சென்னையில் சாலைகளை தோண்ட தடை விதித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் 30ஆம் தேதி முதல் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சென்னையில் சாலைகளில் பள்ளம் தோண்ட தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான சாலைகள், உட்புறச் சாலைகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சேவைத் துறைகள், சாலைகளில் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ள துணை ஆணையர், வட்டார துணை ஆணையர்கள் மூலமாக ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்த சமயத்தில் சாலைகளில் பள்ளம் தோண்டினால் அதில் மழைநீர் தேங்கும், அதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications