தரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்!
பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்று நேற்று மயிரிழையில் மிகப்பெரிய விபத்து ஒன்றில் இருந்து தப்பித்து இருக்கிறது.
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்று நேற்று மயிரிழையில் மிகப்பெரிய விபத்து ஒன்றில் இருந்து தப்பித்து இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது. மதியம் அந்த விமானம் சரியாக சென்னையை அடைந்தது.
சென்னை கிண்டி வந்த விமான தரை இறங்கும் முன் முக்கியமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

என்ன நடந்தது
முதலில் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ரன் வேயில் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து விமானமும் வேகமாக ரன் வேயை நோக்கி வந்துள்ளது. ஆனால் ரன் வே அருகில் வந்து 500 மீட்டர் உயரும் இருக்கும் போது மீண்டும் விமானம் மேலே சென்றது.

மீண்டும் சென்றது
அந்த இண்டிகோ விமானம் மீண்டும் டேக் ஆப் செய்து, வானத்தை நோக்கி சென்றது. அதன்பின் 20 நிமிடம் வட்டம் அடித்துவிட்டு அந்த விமானம், சென்னை விமான நிலையத்தை நோக்கி திரும்பியது. பின் மீண்டும் சரியாக இரண்டாவது ரன் வேயில் தரையிறக்கப்பட்டது.

காரணம்
முதல்முறை அந்த விமானம் தரையிறக்கும் போது, அது சரியாக ரன் வேயை நோக்கி வரவில்லை. ரன் வே சாலையை விட்டு விலகி சென்றது. விமானி சரியாக கணிக்காமல் விமானத்தை இயக்கியதால் இப்படி நடந்து இருக்கிறது. இதனால்தான் விமானம் மீண்டும் மேலே சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

பிரச்சனை இல்லை
இந்த வேகமான செயல்பட்டால் நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் மீது தவறு என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications