எனது உயிருக்கு ஆபத்து! 2 நாட்களாக வெளியே செல்லவில்லை! பெங்களூர் புகழேந்தி பரபரப்பு புகார்!
உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெங்களூர் புகழேந்தி புகார்.
சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெங்களூர் புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் பெங்களூர் புகழேந்தி அளித்த புகார் கடிதத்தின் விவரம் வருமாறு;

40 ஆண்டுகால அரசியல்
''வ.புகழேந்தி ஆகிய நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா திமுகவில் தொடர்ந்து பல பொறுப்புகளை வகித்து பொதுவாழ்வில் என்னை இணைத்து கொண்டு அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறேன் அரசியல் களத்தில் பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்தவன் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் கட்சி ரீதியாக நற்பெயருடன் நெருக்கமாக இருந்தவன் அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட போது எங்களது சொத்துக்களை பிணையாக''

விவாதங்கள்
''வழங்கியவன் தமிழகம் முழுவதும் பிற மாநிலங்களிலும் மக்கள் மத்தியில்நற்பெயருடனும் அனைவரும் பாராட்டும் வகையில் கண்ணியத்துடன் சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறேன். தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு அணிகளாக பிளந்து செயல்படுகின்ற இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளரான அண்ணார் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கழகத்தில் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளேன். அனுதினமும் தொலைக்காட்சி விவாத மேடைகள் ஊடகங்கள் சந்திப்பு கழக செயல்பாடுகள் என பல கருத்துக்களை நான் சார்ந்துள்ள அணியின் சார்பில் பேசி வருகின்றேன்.''

இறந்து விட்டதாக பொய்
''இந்நிலையில் ஒரு நபர் என்னுடைய புகைப்படத்தை நான் இறந்து விட்டதாக சொல்லி அதனை முகநூல் சமூக வலைத்தளங்களில் பரப்பி உண்மைக்கு புறம்பான செய்தியை சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் பிரசுரம் செய்துள்ளார். இதனை எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். இந்த செய்தி எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. பதிவு செய்துள்ள நபர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் எடுத்துக்கொண்டு உள்ள புகைப்படம் அவரது முகநூலில் பதிவு செய்யப்பட்ட படமாக இடம் பெற்றுள்ளது.''

கொலை செய்யும் முயற்சி
''ஒரு சமயம் திட்டமிட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கவாய்ப்புள்ளதாக கருதுகிறேன் அது நிறைவேறி இருக்கும் என்கின்ற எண்ணத்தில் இந்த படம் வெளியிடப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறேன்.திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் வீடு திரும்பிய நான் மீண்டும் இரண்டு நாட்களாக வெளியில் செல்லவில்லை. கொள்கை ரீதியாக மிகவும் கடுமையாக நான் செய்யும் அரசியல் விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இப்படிப்பட்ட செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவது எனது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.''

உயிருக்கு ஆபத்து
''மேலே குறிப்பிட்ட படி இந்த நபரின் பெயரையும் முகவரியையும் இந்த புகார் உடன் இணைத்துள்ளேன் தாங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இது அலட்சியப்படுத்தப்படும் ஆனால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதனை முன்கூட்டியே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இரு பிரிவினர்களுக்கு இடையில் கலவரத்தை மூட்டும் செயலாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications