திமுக செய்த மிகப்பெரிய தவறு.. போதை பொருள் கலாச்சாரம் உச்சம்.. விஜய் சட்டமன்றத்தில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதைப் பொருள் பயன்பாடு தான் என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் போலீஸ் துறையை நேரடியாகக் கையாண்ட முதல்வர், போதைப் பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜயின் பதில் உரை எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay TVK MK stalin Vijay blames DMK for drugs Tamil Nadu law and order crisis Vijay speech on drug menace DMK failed on drugs TVK government DGP appointment Udhayanidhi Stalin criticism Tamil Nadu assembly debate Vijay response to opposition Drug problem in Tamil Nadu Law and order under Vijay government

எதிர்க்கட்சிகள் அவதூறு அரசியல் செய்கின்றன

சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவதூறு அரசியல் செய்து வருவதாக முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் பேசும் போதும் குற்றம் சாட்டினார். சட்ட ஒழுங்கு குறித்து நிச்சயம் யார் வேண்டும் என்றாலும் பேசலாம்.. இது மன்னராட்சி இல்லை! மக்களாட்சி என வெளிப்படையாக பேசினார் விஜய்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அவர், கடந்த 10 மாதங்களாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு டிஜிபி நியமனம் இல்லாமல் போலீஸ் துறை இயங்கி வந்ததாகவும், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் டிஜிபி நியமனம் செய்யப்பட்டதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

முந்தைய ஆட்சியின் தோல்வி

போதைப் பொருள் ஒழிப்பில் கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் துறையை வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். இதனால் தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார் முதல்வர் விஜய்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானத்தில் விஜய் அரசின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் இன்று விரிவாக பேசினார்.

மக்களாட்சியில் விவாதம் சுதந்திரம்

சட்ட ஒழுங்குமுறை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் அடிப்படை என்றும், ஆனால் அது அவதூறு அரசியலாக மாறக்கூடாது என்றும் முதல்வர் விஜய் எச்சரித்தார். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கை மேம்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+