காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை தவெக ஒழித்துள்ளது! விஜய் காட்டம்
சென்னை: காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை தவெக ஒழித்துள்ளது என முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார். யார் யாரெல்லாம் சேரவே மாட்டார்கள் என நினைத்தோமோ அவர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
17ஆவது தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்தது. இதையடுத்து இன்றைய தினம், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை தவெக ஒழித்துள்ளது. யாரெல்லாம் சேரவே மாட்டார்கள் என நினைத்தோமோ அவர்கள் எல்லாம் சேர்ந்துவிட்டார்கள்.
விரைவில் மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். இருமொழிக் கொள்கை என்பதில்
மாற்றுக்கருத்தே இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதுதான் வழக்கம்; இதில் நம் நிலைப்பாட்டை உறுதியாக
மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். இருக்க வைப்போம்.
போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவி கொட்டிக் கிடக்கு; இதனை ஆரம்ப நிலையிலேயே ஏன் கட்டுப்படுத்தவில்லை? என விஜய் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications