கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த வேதனை.. என் மீதே பழி போட்டது வேற லெவல்.. முதல்வர் விஜய் பதிலுரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதன்பின் திமுக மற்றும் தவெக எம்எல்ஏ-க்கள் இடையே கடுமையான விவாதம் நடந்தன. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதில் உரை வழங்கினார்.

அதில் முதல்வர் விஜய் பேசுகையில், நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து CM ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. அரசியலைப் பேசியதால் என் படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சனை பற்றி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். விஜய்யின் உழைக்கும், உயர்வுக்கு பின்னால் தமிழக மக்களின் அரவணைப்பும் தான் காரணம்.

Vijay Karur Tragedy DMK

ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராட்டம், 2009ல் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்கள் நலப் பணிகள், கல்வி, வெள்ள நிவாரணம், கொரோனா உதவி, நூலகம், முட்டை, பால், ரொட்டி திட்டம், பயிலகம், விலையில்லா விருந்தகம் இப்படி பல வழிகளில் மக்களுக்கு துணையாக இருந்தோம். சினிமாவில் ஊழல் எதிர்ப்பு, கல்வி, சமூக நீதியை பேசினோம்.

2011ல் நாகையில் மீனவர்கள் பிரச்சனைக்காக போராடினோம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆதரவு, ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆதரவு, கல்வி விருது விழா, 2024ல் தவெகவை தொடங்கினோம். பெரியாரின் கொள்கைகளில் ஏற்புடையதை மட்டுமே ஏற்றுக் கொண்டோம். அவரின் பெண்கள் முன்னேற்றம், சமூகநீதியை ஏற்றோம்.

மதுரை மாநாட்டில் அரசியல் வழிகாட்டியாக அண்ணா, எம்ஜிஆரை ஏற்றுக் கொண்டோம். ஒவ்வொரு வீட்டிலும் நம்மை அவர்களின் மகனாக ஏற்றுக் கொண்டார்கள். இதெல்லாம் புரிந்தாலும், புரியாதது போல் நடிப்பவர்கள் எல்லாம் தான், நம்மை நடிகன் கட்சி என்று நக்கல், நய்யாண்டி பேசுவார்கள். அதனைப் பற்றி கவலையில்லை.

2026ல் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று 35% வாக்குகளை பெற்றோம். ஆளும் கட்சியாக ஆனதும் சாதாரணமாக நடந்தது இல்லை. எங்களின் இரண்டே கால் ஆண்டு பயணம் எளிதாக இருக்கவில்லை. மக்கள் சந்திப்புக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. கூட்ட நிகழ்ச்சிக்கு போதுமான பாதுகாப்பு இல்லாமல், நமது சொந்தங்கள், உறவுகள் 41 பேர் இறந்த வேதனையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அதிலும் நம் மீதே பழி போட்டதெல்லாம் வேற லெவல் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+