ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்காமல்.. பிரச்சார தொனியில் சட்டசபையில் பேசிய விஜய்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பேசிய முதல்வர் விஜய்... ஆளுநர் உரையை பற்றியே பேசாமல் முழுக்க முழுக்க பிரச்சார தொனியில் பேசியது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இன்று முதல்வர் விஜய் தனது பேச்சில், எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முடியும் என்று நினைத்து பேசிய எதிர்க்கட்சியினருக்கு நன்றி.

தவெகவை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கும். ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்தது மாதிரி சிலர் பேசுகிறார்கள். எதிர்த்து பேசினால் தான், எதிர்க்கட்சி என சிலர் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன் நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து CM ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது.

CM Vijay spoke like a election canvass in his speech inside the assembly

அரசியலைப் பேசியதால் என் படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சனைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனை அளிக்கிறது. அது ஒருபோதும் மனதில் இருந்து ஆறாது. கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டனர். கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் பற்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கரூர் சம்பவத்தில் எங்கள் மீது பழி போட்ட கொடுமை எல்லாம் வேற லெவல். மக்களை சந்திப்பதில் பல்வேறு நெருக்கடிகள், பாதுகாப்பின்மை இருந்தது. அதை என்னவென்றே சொல்வது என்றே தெரியவில்லை. பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டோம்.. ஆனால், அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம்..

திரைப்படங்களிலேயே ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, குறித்து பேசினோம்.. அரசியலை பற்றிப் பேசியதாலேயே எனது திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தன. சந்தித்து வருகிறது. கட்சி ஆரம்பித்த உடனேயே சிஏஏவுக்கு எதிராக அறிக்கை விட்டோம். நடிகனாக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் பல நிலைகளை கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளோம். 199களில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நின்றோம்.

எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நினைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வணக்கம். வரலாற்று சிறப்புமிக்க சட்டசபை இது. மாநிலம் சார்ந்த பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை அடைத்துள்ளோம். ஒரே குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது எங்கள் கொள்கை இல்லை.. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சி இது. நமக்கு எதிராக யாருமே எதிர்பார்க்காத நபர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள்.

எங்கள் சட்டசபை உறுப்பினர்கள் எல்லாம் புதியவர்கள் தான்! எங்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மக்கள் சேவை செய்ய தான் தெரியும். மக்கள் பணத்தை ஏமாற்றத் தெரியாது. மக்கள் பணி செய்யவே தெரியுமே தவிர மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தை, கனிம வளங்களை கொள்ளையடிக்க தெரியாது தான் என்று முதல்வர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+