கண்ணெதிரே அக்கிரமம்.. வங்க தேசத்தில் இந்துக்கள் மீது வெறியாட்டம்! இந்து முன்னணி எடுத்த முடிவு இதுதான்
சென்னை: வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருப்போம் என்று தமிழக தலைவர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.. மற்றொருபக்கம், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனிதத்தன்மை அற்ற வெறிச்செயல்களை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது இந்து முன்னணி.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "வங்க தேசத்தில் தலைதூக்கிய இஸ்லாமிய அடிப்படை மதவாதஅமைப்புகள், அடிப்படை வாதத்தை ஏற்றுக் கொள்ளாத அந்நாட்டு பிரதமர் ஹசீனா பேகத்தை ஆட்சியில் இருந்து இறக்கி, தனது சொந்த நாட்டிலிருந்தே வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.. இதுவெறும் அரசியல் ரீதியானஆட்சி கவிழ்ப்பு அல்ல.

வங்கதேசம்: வங்கதேசம் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகவே ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய சிலநாடுகளின் கைங்கரியம் இல்லாமல் இந்த சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை.
50 ஆண்டுகளாக இந்தியாவின்கிழக்குப் பகுதியில் பெரிய அளவுக்கு எல்லைப் பிரச்சினை அல்லது நதிநீர்ப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றைப் பேசித் தீர்க்கக்கூடிய சூழல் இருந்தது. அந்த சமநிலையை முற்றிலும் மாற்றிடும் நோக்கத்தோடு இந்த ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்தியா நிச்சயம் இதில் கவனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
போர்மேகம்: இருந்தாலும் மேற்கில் அதிகமாகவும் வடக்கில் ஓரளவு போர்மேகம் சூழ்ந்திருந்த இந்திய எல்லையில் இப்போது கிழக்குப் பகுதியில் இருந்தும் போர் மேகங்கள் உருவாகி ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. எனவே, வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருப்போம்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற வெறிச்செயலை கண்டித்து வரும் திங்கள்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தின் மக்களை, பாகிஸ்தான் கொடுமை செய்தபோது வங்கதேசத்தைக் காப்பாற்றி தனி நாடாக சுதந்திரமாக செயல்பட இந்தியா உதவியது. மேலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பலவிதங்களிலும் நமது நாடு துணை நின்று வருகிறது.
எவ்வளவு உதவிகள் செய்தாலும் அடிப்படைவாத மதவெறி, நன்றி விசுவாசம் பார்ப்பதில்லை என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்கள் உலகிற்கு உணர்த்துகின்றன. வங்கதேசத்தில் நடப்பது இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறுமாதிரி இருக்கிறது.
இந்துக்கள்: இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாகின்றன. இந்து கவுன்சிலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் இந்து என்பதாலேயே அவர் வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல்வேறு விதமாக இந்துக்களின் மீதும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய குடியுரிமை சட்ட (சிஏஏ) திருத்தத்தை எதிர்த்தவர்கள், வங்கதேசத்தில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
சிஏஏ சட்டம்: மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்படும் போது உயிர் மட்டும்மாவது மிஞ்சினால் போதும் என நாட்டை விட்டு வெளியேறி வரும்போது இந்தியா அரவணைக்கத்தானே வேண்டும்? ஆனால் இஸ்லாமிய நாடுகளாக உருவான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களையும் அகதிகளையும் ஒன்றாக பேசியவர்கள், சிஏஏ சட்டத்தை விமர்சனம் செய்த இண்டியா கூட்டணி கட்சியினர் என்பதை நமது மக்கள் உணர வேண்டும்.
தற்போது வங்கதேசத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் இந்துக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் மீண்டும் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் சூழல் ஏற்படுவதை தடுக்க இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும். உடனடியாக இனவாத, மதவெறி கலவரத்தை ஒடுக்க சர்வதேச படைகளை அனுப்பிட வேண்டும். கண் எதிரே அக்கிரமம் நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆலோசனை நடத்தி வருத்தம் தெரிவிப்பதால் என்ன பலன் இருக்க போகிறது.
ஐநா - இந்திய அரசு: எனவே உடனடியாக ஐ.நா.வும், இந்திய அரசும் தக்க நடவடிக்கைகளை எடுத்து வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு மன உறுதியை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் நிரந்தரமான பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும். இந்த சமயத்தில் இந்தியாவிலும் அது போல் ஒரு மக்கள் கிளர்ச்சி நடக்க வேண்டும் என்பது போல பிரிவினைவாத, தேசவிரோத கருத்துக்களை பலர் பரப்பி வருகின்றனர்.
இவர்களுடைய நோக்கம் நமது நாடு முன்னேறக்கூடாது, நமது நாட்டின் மக்கள் அமைதியாக வாழக் கூடாது. சண்டை சச்சரவு மிகுந்து, நாடு ஒரு அமைதியின்மையை அடைந்தால் அதன் மூலம் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற கேவலமான நோக்குடன் செயல்படுகிறார்கள். இத்தகைய தீய எண்ணம் கொண்டவர்களை அடையாளங்கண்டு உடனடியாக தேசப் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு: இவ்விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு வங்கதேச இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனிதத்தன்மை அற்ற வெறிச் செயல்களை கண்டித்தும், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு நீதி கோரியும் இந்து முன்னணி வருகிற திங்கட்கிழமை (12.8.24) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications