வங்கி கணக்கு இருக்குதுல்ல.. நீங்க பேங்க்கில் நகை கடன் வாங்க போறீங்களா? அப்ப இதை உடனே நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைகளை வைத்து வங்கியில் கடன் வாங்க போறீங்களா? இதற்கு ஒருசில ஆவணங்கள் கட்டாயம் தேவையாக இருக்கின்றன..

சொந்தமாக வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது என்பது பலரது வாழ்வியல் கனவாகவே உள்ளது.. வீடு வாங்கவும், வீடு கட்டவும், நிறைய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வீட்டு கடன்களை வழங்குகின்றன..

Bank Account and do you know what are the Major things to notice before you applying for a Gold Loan

அத்துடன், அதற்கு பல்வேறுவிதமான வட்டி சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதில், அரசு வங்கிகளில் மட்டுமே தங்கக் கடன் வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், இங்கு வட்டி விகிதம் குறைவாகும்.

வீட்டுக்கடன்: ஒருவரின் வருமானம், வாங்கும் கடனின் அளவு, அந்த கடனை அவர் திருப்பி செலுத்துவதற்கான திறன், இவைகளை எல்லாம் வைத்துதான், ஒருவருக்கு வீட்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.. அதேபோல, வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

அப்படி வீட்டு கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், உங்களுடைய சொத்துகள், சேமிப்பு, வயது, கல்வித்தகுதி, உங்களை சார்ந்திருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பத்திரம், தாய் பத்திரம், உங்களது மாத வருமானத்திற்கான சான்றிதழ், கடனுக்கு பொறுப்பான ஆவணம், கட்டிட அனுமதி இப்படி பல சான்றுகள் தேவைப்படும்.

ஆவணங்கள்: டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை போன்றவை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லாவிட்டால், படிவம் 60-ஐ சமர்ப்பிக்குமாறு சொல்வார்கள்.. முகவரி சான்றுக்காக, மின்சார கட்டணத்தின் ரசீது, ரேஷன் அட்டை அல்லது தொலைபேசி கட்டண ரசீது போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கடன் அளிப்பவர்களில் சிலர் உங்களது வருமான சான்றையும் கேட்பார்கள்.

நகைக்கடன்: ஆனால், நகைக்கடன் வாங்குவதற்கு பெரியதாக எதுவும் தேவைப்படாது.. முகவரி சான்று, அடையாள சான்று உள்ளிட்டவை இருந்தால் போதுமானது.. உங்களது, நகையின் தரத்தினை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே, தங்க நகை மீதான கடனை நீங்கள் பெற முடியும்..

அதேபோல, தங்க கட்டிகள் மற்றும் தங்க காசுகளையும் அடகாக வைத்து வங்கிகளில் கடன் பெற முடியாது. எனினும், நகை கடன்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியே வசூலிக்கின்றன. ஆனால் வட்டி விகிதம் மட்டுமே வங்கிக்கு வங்கி மாறுபடும்.

கால அவகாசம்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 7.5 சதவீதத்தில் தொடங்கி வட்டி விகிதம் வேறு வேறாக உள்ளன.. மேலும், அதிகபட்சம் ரூ.1 கோடி வரையில் நகைக்கடன் பெறலாம்.. இந்த கடனை திருப்பி செலுத்தும் காலமும் 20 வருடங்கள் வரை இருக்கிறது.. இதைத்தவிர, செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் துவங்குகிறது.. இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூல் செய்யப்படும்.

அதேபோல, கடன் வாங்குவதற்கு முன்பு, உங்களது தங்கம் 18 காரட்டுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.. காரணம், பல வங்கிகள் 18 காரட்டுக்கும் குறைவான தங்கக் கடனை வழங்குவதில்லை.

நகைக்கடன்: பொதுவாக, வங்கிக் கடன் வாங்கும்போது செயல்பாட்டு கட்டணம், மதிப்பீடு கட்டணம் எவ்வளவு என்பதையும் கவனிக்கவேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதால், சில நிதி நிறுவனங்கள் கூடுதலாக நகைக்கடன்களை வழங்கி ஈர்க்க பார்ப்பார்கள் என்பதால், கொஞ்சம் எச்சரிக்கையும் தேவை.

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும்.. எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக, உங்களது தேவைக்கு அதிகமான கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.. ஒருவேளை, உங்களால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டால், அந்த நகையையே இழக்க நேரிடலாம். அதனால், சரியான முறையில் தவறாமல் வட்டியை கட்டிவிட வேண்டும்.

கடன்தொகை: ஒருசில வங்கிகள் குறிப்பாக, ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தவரை, கடன் தொகை - ரூ.10,000 முதல் ரூ.1 கோடியாக உள்ளது. இதே எஸ்பிஐ 20,000 ரூபாய் முதல் 20 லட்சம் வரையில் வாங்கிக்கொள்ளலாம்..

ஆக்சிஸ் வங்கியில், கடன் தொகையானது ரூ.25,001 முதல் ரூ.25 லட்சமும், ஹெச்டிஎஃப்சி வங்கியில், கடன் தொகையானது, ரூ.10,000 முதல் பெற்றுக் கொள்ளலாம். கனரா வங்கியில், கடன் தொகை, ரூ.5,000 முதல் ரூ.35 லட்சமும், முத்தூட் வங்கியில், கடன்தொகை 1,500 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+