வங்கிகளில் லோன் வாங்கறீங்களா.. குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் பேங்க்குகள்.. பெருகும் நம்பிக்கை
சென்னை: எதிர்பாராத மற்றும் அவசர தேவைகளுக்காக, வங்கிகளில் கடன்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்தவகையில், தங்கள் கஸ்டமர்களுக்கு குறைந்தவட்டியில் கடன்தொகையை வங்கிகள் வழங்கிவருவது, பேருதவியாக அவர்களுக்கு அமைந்து வருகிறது.
பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது.. அதில் ஒன்றுதான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.. கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சாராம்சமாகும்..

இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. அதேபோல, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது..
நிதி நிறுவனங்கள்: வீடு கட்ட வேண்டுமானாலும், வீடு வாங்க வேண்டுமானாலும், நிறைய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வீட்டு கடன்களை வழங்குகின்றன.. அத்துடன், அதற்கு பல்வேறுவிதமான வட்டி சலுகைகளையும் வழங்கி வருகின்றன. ஒருவரின் வருமானம், வாங்கும் கடனின் அளவு, அந்த கடனை அவர் திருப்பி செலுத்துவதற்கான திறன், இவைகளை எல்லாம் வைத்துதான், ஒருவருக்கு வீட்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது..
அதேபோல, வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அப்படி வீட்டு கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், உங்களுடைய சொத்துகள், சேமிப்பு, வயது, கல்வித்தகுதி, உங்களை சார்ந்திருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள்: முன்பெல்லாம் தனிநபர் கடன் பெறுவதற்கு வங்கியை தேடி வாடிக்கையாளர்கள் செல்லும் நிலை இருந்தது.. அல்லது வங்கியின் பிரதிநிதி ஒருவர் நம்மை நேரில் தேடிவந்து பார்த்து விசாரணை செய்து, விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் முறை இருந்தது..
ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை.. கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற நடைமுறைகள் டிஜிட்டல் முறையிலேயே வந்துவிட்டதால், கடன் பெறுவது என்ற நடைமுறையே எளிதாகிவிட்டது. குறைந்த வட்டியுடன் வீட்டு கடன் தரக்கூடிய ஒரு சில வங்கிகளை இங்கே பார்க்கலாம்.
ஹெச்டிஎஃப்சி HDFC வங்கி: தனியார் வங்கி என்றாலும், இந்த வங்கியில் குறைந்த விகிதத்தில் வீட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன.. வட்டி விகிதம் 8.45 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரை உள்ளது.
IndusInd வங்கி: இந்த வங்கியின் வட்டி விகிதம் 8.5 சதவீதம் முதல் 9.7 சதவீதம் வரையாகும்.. அதேபோல, கடனை திருப்பி செலுத்த 30 வருடங்கள் அவகாசம் தருகிறது.

இந்தியன் வங்கி: இந்தியன் வங்கியில், வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதம் முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 8.6 சதவீதம் குறைந்தபட்ச வட்டியாகவும், அதிகபட்சமாக 9.45 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இங்கு 10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வீட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 8.6 சதவீதம் முதல் 10.3 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தோடு இந்த வங்கியில் வீட்டு கடன்கள் வழங்கப்படுகின்றன.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications