"எச்சரிக்கை.." வீட்டுக்கடன் வாங்கியோர் கவனம்.. இல்லைனா பெரிய சிக்கலாகிடும்! வந்த புது வார்னிங்
சென்னை: சொந்த வீடு வாங்கியோரை ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அதிக வட்டி செலுத்த வேண்டும் என்று பிரபல பொருளாதார ஆலோசகர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது அனைவரது கனவாக இருக்கிறது. வேலைக்குப் போக ஆரம்பித்த உடனேயே பலரும் இங்கே கேட்பது அப்புறம் சொந்த வீடு எப்போது என்பது தான்.

இதன் காரணமாக நமது இளைஞர்கள் பலரும் எப்படியாவது கடனை வாங்கியாவது வீட்டை வாங்கிவிடுவார்கள். அதன் பிறகு நீண்ட காலம் கடனை கட்ட வேண்டும் என்றாலும் கூட நமக்கென ஒரு வீடு என்பது அவர்களுக்கு ஒரு நிம்மதியைத் தருகிறது.
வீட்டுக்கடன்: அதேநேரம் வீட்டுக்கடன் வாங்கும் போதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கிறது. அவற்றை எல்லாம் நாம் துல்லியமாகக் கவனிக்கவில்லை என்றால் நாம் தேவையில்லாமல் வங்கிகளுக்கு அதிக கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அதில் ஒன்று தான் வட்டி விகிதம். பொதுவாக வீட்டுக்கடனுக்கு வட்டி வாங்கும் போது இரண்டு ஆப்ஷன்கள் நமக்குத் தருவார்கள். அதாவது ஃபிளோட்டிங் வட்டி, நிலையான வட்டி என்று இரண்டு வகை இருக்கிறது.
வட்டி விகிதங்கள்: அதில் நிலையான வட்டி என்றால் கடன் காலம் முழுக்க வட்டி ஒரே மாதிரி இருக்கும். அதாவது நீங்கள் இப்போது 20 ஆண்டுகள் வீட்டுக்கடன் வாங்குகிறீர்கள். என்றால் இப்போது தொடங்கி கடனை கட்டி முடிக்கும் 20ஆம் ஆண்டு வரை ஒரே வட்டி தான் செலுத்துவீர்கள். சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் உங்களைப் பாதிக்காது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தாலும் குறைத்தாலும் நீங்கள் செலுத்த வேண்டி வட்டி ஒன்றுதான்.
அடுத்து ஃபிளோட்டிங் வட்டி. இது நிலையான வட்டிக்கு நேர் எதிரானது. இது சந்தை மதிப்பைப் பொறுத்து மாறும். அதாவது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தால் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். மறுபுறம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் அதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும். இதுவே ஃபிளோட்டிங் வட்டி. பெரும்பாலான வங்கிகள் தொடக்கத்தில் நம்மை ஃபிளோட்டிங் வட்டி. விகிதத்தைத் தான் தரும்.
விளக்கம்: இதற்கிடையே வீட்டுக்கடன் வாங்கியவர்களைக் குறிவைத்து இங்கே ஒரு விஷயம் நடக்கிறதாம். அதில் சிக்கினால் தேவையே இல்லாமல் அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். என்ன அது.. அதில் உள்ள பிரச்சினை என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டுக்கடன் வாங்கியோரின் கவனத்திற்கு - எச்சரிக்கைப் பதிவு.. தனியார் வங்கிகளில் இருந்து, "வட்டி விகிதம் மாறப் போகிறது. அதற்குள் உங்களது EMI காலம் அல்லது EMI, இரண்டையும் மாற்றிக் கொள்ளுங்கள்" ன்னு மெசேஜ் அனுப்புறாங்க.
கவனமா இருங்க: "அய்யய்யோ, வட்டி விகிதம் மாறப் போகுதே" ன்னு போனீங்கன்னா, fixed rate க்கு மாத்தி விட்டுடுவாங்க. கவனம்... பணவீக்கம் கட்டுக்குள் வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து விட்டது. இனி வரும் காலங்களில் வட்டி விகிதங்கள் இறங்கத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
வங்கிகள், தங்களுக்கு லாபமில்லாத எதையும் வலிந்து செய்ய மாட்டார்கள். Wanted ஆக அவர்களே இந்த மாதிரி message கள் அனுப்புகிறார்கள் என்றால், அதனால் உங்களுக்கு எந்தவிதமான லாபமும் இருக்காது என்பதை அறிக. நன்றாக யோசித்து, முடிவுகளை எடுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்..












Click it and Unblock the Notifications