நீதிமன்றம் பற்றி என்ன தெரியும்? பிரதமரின் பொருளாதார ஆலோசனைகுழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்
சென்னை: நீதிமன்ற விடுமுறைகள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய நீதித்துறையில், கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என தொடர் விடுமுறைகள் உள்ளதாகவும், இது அபத்தமானது எனவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகளாக உள்ளவர்கள், நீண்ட நேரம் பணியாற்றுகின்றனர்; நிர்வாக பணிகளை மேற்கொள்கின்றனர்; நீதிமன்ற நேரத்துக்குப் பிறகும் நீதிமன்றங்களில் இருந்து பணியாற்றுகின்றனர் என்பது நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் தீர்ப்புகள் எழுதுவதிலும், திருத்தங்கள் செய்வதிலும் மட்டும் தான் நீதிபதிகள் செலவிடுகின்றனர் என்பது நிறைய பேருக்கு தெரியாது. 37 ஆண்டுகளுக்கு முன், 127 வது சட்ட ஆணையம் பரிந்துரைத்தும், நீதித்துறை செலவினங்கள் இன்னும் திட்டமிடப்படாத செலவினங்களில் உள்ளது என்பது சஞ்சீவ் சன்யாலுக்கு தெரியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என 1987 ஆம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் லோக்சபாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் வெளியிட்ட அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது எனக் கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம், இரண்டு மடங்குக்கு அதிகமாக வழக்குகளை தற்போதைய நீதிபதிகள் கையாள்கின்றனர். நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நீதிபதிகளைப் பற்றியும், நீதித்துறை பற்றியும் பேச அதிகார அமைப்புக்கு எந்தவிதமான தார்மீக உரிமையோ, சட்ட உரிமையோ இல்லை என கண்டித்துள்ளது பார் கவுன்சில்.
5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சஞ்சீவ் சன்யால் கூறும் நிலையில், அதில் 73 சதவீத வழக்குகள் அரசு தாக்கல் செய்தது எனவும், பொறுப்பற்ற முறையில் நீதித்துறையை விமர்சித்துள்ள சஞ்சிவ் சன்யாலின் கருத்துக்கள் கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications