"குளிக்கிற வீடியோ அனுப்பு".. காதலன் கேட்டா இப்படியா இந்த பொண்ணு பண்ணும்.. வினையான விபரீதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிக்கிற வீடியோவை எடுத்து அனுப்பு என்று காதலன் கேட்டாராம்.. உடனே அந்த காலேஜ் படிக்கிற பெண்ணும் அனுப்பி வைத்து இருக்கிறார்.. இதுதான் வினையாகி விட்டது..!

சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திக்... 12ம் கிளாஸ் தான் படித்திருக்கிறார்.. மேற்கொண்டு படிக்கவில்லை.. இவர் ஒரு குக்...

பல்வேறு பகுதிகளில் சமையல் வேலை செய்து வருகிறார்... இவருக்கு பேஸ்புக்கில் ஒரு காலேஜ் பெண் பழக்கமாகி இருக்கிறார்.. நட்பாகத்தான் பழகியிருக்கிறார்கள்.. அப்படியே மெல்ல மெல்ல காதலானது.. அந்த பெண் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்தவராம்.

கல்யாணம்

கல்யாணம்


ஒருநாள், அவரிடம் குளிக்கிற வீடியோவை தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கும்படி கார்த்தி கேட்டாராம்.. அந்த பெண்ணும், கல்யாணம் செய்து கொள்ளும் காதலன்தானே என்று நம்பி, அது மாதிரியே வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார்.. கொஞ்ச நாள் கழித்து, அந்த வீடியோவை, அதே பெண்ணுக்கு காட்டி, மிரட்ட ஆரம்பித்துள்ளார் கார்த்திக்.. மேற்கொண்டு படிக்கணும், அதுக்கு பீஸ் கட்ட பணம் வேண்டும் என்று, பணம் கேட்டுள்ளார்..

மிரட்டல்

மிரட்டல்

உடனே அந்த பெண் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறார்.. 2 முறை பணம் அனுப்பியிருக்கிறார்.. அதன்பிறகு 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாயானது.. 10 ஆயிரம் கேட்டதுடன், அந்த பெண் அலறிவிட்டார்.. காலேஜ் படித்து கொண்டிருக்கும் தன்னிடம் அவ்வளவு பணம் எப்படி இருக்கும் என்று மறுத்துள்ளார். இதனை கேள்விப்பட்ட கார்த்திக் உடனடியாக, அந்த பெண்ணின் அப்பாவுக்கு போன் செய்து, மகளின் குளிக்கிற வீடியோ பற்றி சொல்லி உள்ளார்.. 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று பணத்தை உயர்த்தி கேட்டுள்ளார்..

செல்போன்

செல்போன்

இதை கேட்டு அதிர்ந்து போன தந்தை, உடனடியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் போலீசுக்கு சென்று புகார் அளித்தார்.. இதையடுத்து, மகளிர் போலீசார் திருபுவனை போலீசாருக்கு இதுகுறித்து சொல்லவும், அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர். கார்த்திக்கின் ஃபேஸ்புக் ஆய்வு செய்யப்பட்டது.. அவரது செல்போன் நம்பரை வைத்து, மொத்த டீடெயிலும் எடுத்தனர்..

 10 பெண்கள்

10 பெண்கள்

அவர் கூவத்தூரில் பதுங்கி இருந்ததை அறிந்து அதிரடியாக கைது செய்தனர்.. விசாரணையில்தான் தெரிந்தது, இது மாதிரியே 10 பெண்களை ஏமாற்றி ஏகப்பட்ட பணத்தை கொள்ளையடித்தது என்பது.. கார்த்தியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் தந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி தந்துள்ளனர்.. கார்த்திக்கிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+