பிக் பாஸ் பார்த்தீங்களா.. 'பவாவை' வைத்து கமல் போட்ட பிளான்.. இனிமே தான் இருக்கு ஆட்டமே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவி இல்லை,மொபைல் இல்லை, புத்தகம் இல்லை, கதை சொல்ல ஒரு நபர் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது.அதனால் பவா செல்லத்துரை கண்டிப்பாக நான்கு வாரத்திற்கு மேல் தாக்குபிடிப்பார் என்றும் பவாவை வைத்து நிறைய கதைகள் கமல்ஹாசன் சொல்ல வைப்பார் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பவா செல்லத்துரை அருமையான எழுத்தாளர் ஆவார். சிறந்த கதை சொல்லியும் கூட.. யாரையும் தனது கதைகளை மெய் மறந்து கேட்க வைக்கும் வல்லமை உடையவர்.. அவர் முன்பு ஒரு முறை பேட்டியில் சொன்னதை இப்போது நினைவு கூர்ந்தாக வேண்டும். கதை எழுதுவதை போல், கதை சொல்வது என்பதும் அவரது வாழ்க்கையில் தன்னிச்சையாக நடந்த ஒன்றுதானாம்.

நண்பர்களுடன் உரையாடும் போது, உரையாடல்கள், நிகழ்வுகளில் பேசுவது இப்படி எதில் என்றாலும் கதைகள் இல்லாமல் பேச முடியாது என்று பவா செல்லத்துரை சொல்லியிருக்கிறார். இன்றும் யூடியூப்பை திறந்து போய் பவா செல்லத்துரையின் கதை சொல்லும் விதத்தை நீங்கள் தாராளமாக பார்க்க முடியும்.
பவா செல்லத்துரையின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். இவர் சிறந்த எழுத்தாளர், பதிப்பாளர், கதை சொல்லியும் மட்டுமல்ல சிறந்த மொழி பெயர்பாளரும் கூட. இவரது மனைவி கே. வி. ஷைலஜாவும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஆவார்.. இவரது மனைவியின் அக்கா கே. வி. ஜெயஸ்ரீ, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புகான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் ஆவார்.

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை,நீர் மற்றும் கோழி, எல்லா நாளும் கார்த்திகை என பல சிறுகதைகள், நூல்களை எழுதி உள்ளார் பவா செல்லத்துரை. பவா செல்லத்துரையையை நடிகராக ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ உள்ளிட்ட படங்களில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சிறந்தகதை சொல்லியான இவரது திறமையை பலரும் பார்க்க போகிறார்கள்.
பிக்பாஸ் என்றாலே மேட்டுக்குடி கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இடமாகவே பார்க்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தில் சாமானியர்களின் குரல்களை வலிமையாக பதிவு செய்தவர், கதை சொல்லியாக செல்லும் போது, பல விஷயங்கள் மக்களுக்கு போய் சேர வாய்ப்பு உள்ளது.

பவா செல்லத்துரை உள்ளே வரும் போதே, வயதான இவரை எல்லாம் ஓரிரு வாரத்திலேயே வெளியேற்றி விடுவார்கள் என்று தான் பிக்பாஸ் பிரியர்கள் கூறினார்கள்.ஆனால் பல ஆளுமைகள், எழுத்தாளர்கள், பவாசெல்லத்துரை முகத்தை பிக்பாஸில் பார்த்த போது மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல் ஒருவரை பிக்பாஸில் கொண்டு வந்ததன் பின்னணில் கமல்ஹாசன் தான் இருப்பார் என்று அப்போதே பலரும் சொன்னார்கள்.
இந்நிலையில் பவா செல்லத்துரை போன உடனேயே தனது பணியை ஆரம்பித்துவிட்டார். பிக்பாஸில் டிவி இல்லை,மொபைல் இல்லை, புத்தகம் இல்லை,கதை சொல்ல ஒரு நபர் இருந்தால் யாருக்குதான் பிடிக்காது. உடனே உட்கார்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த எபிசோட்களில் பவா செல்லத்துரையின் கதைகள் ஆரம்பம் ஆகி உள்ளன. இதை பார்க்கும் போது பவா கண்டிப்பாக நான்கு வாரம் தாக்குபிடிப்பார் என்றும் பவா அவர்களை வைத்து நிறைய கதைகள் கமல் சொல்ல வைப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications